லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே அதில் விண்டேஜ் பாடலுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் கூலி படத்தில் அவர் பயன்படுத்திய விண்டேஜ் பாடல் என்ன என்பதை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் படங்களில் இடம்பெறும் புதுப்பாடல்களை விட அதில் பயன்படுத்தப்படும் பழைய பாடல்களுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. இந்த டிரெண்டை உருவாக்கியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் தன்னுடைய கைதி படத்தில் தொடங்கி, மாஸ்டர், விக்ரம், லியோ என தன்னுடைய அனைத்து படங்களிலும் விண்டேஜ் பாடல்களை பயன்படுத்தி வருகிறார். அந்தப் பாடல்கள் மீண்டும் வைரலாகி நல்ல வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் கூலி படத்தில் அவர் என்ன பாடலை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.
24
கூலி பட விண்டேஜ் பாடல்
இந்த நிலையில், கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி இருக்கும் விண்டேஜ் பாடல் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி அவர் ரஜினிகாந்தின் விண்டேஜ் பாடலையே கூலியில் பயன்படுத்தி இருக்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ என்கிற பாடலை தான் லோகி, கூலி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். இந்தப் பாடலுக்கு திரையரங்கில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் பாடல் இனி வரும் நாட்களில் பட்டிதொட்டியெங்கும் வைரலாகும் என்பதில் சந்தேகமில்லை.
34
லோகேஷால் வைரலாகும் விண்டேஜ் பாடல்கள்
இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் ஆசை அதிகம் வச்சு மற்றும் ஜும்பலக்கா ஜும்பலக்கா ஆகிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு ஹிட் ஆகின. இதன்பின்னர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் புதுநெல்லு புது நாத்து படத்தில் இருந்து கருத்த மச்சான் பாடலை பயன்படுத்தி இருந்தார். அதேபோல் விக்ரம் படத்தில் அசுரன் படத்தில் இடம்பெற்ற சக்கு சக்கு வத்திக்குச்சு என்கிற பாடலை பயன்படுத்தி இருந்தார். பின்னர் வெளியான லியோ படத்தில் கரு கரு கருப்பாயி மற்றும் தாமரை பூவுக்கும் ஆகிய இரண்டு பாடல்களை பயன்படுத்தி இருந்தார் லோகி.
இப்படி தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது கூலி படத்தில் ரஜினிகாந்திற்காக அவருடைய விண்டேஜ் பாடலான வா வா பக்கம் வா பாடலை லோகி பயன்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தரமான டிஸ்கோ பாடலான இது தற்போது ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு கூலி படத்தில் இடம்பெற்று இருக்கிறது. இப்பாடல் இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.