ரஜினிகாந்தின் சமீபத்திய படம் கூலிக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டு வரும் இப்படம், உள்நாட்டில் ரூ.235 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் இந்தி பதிப்பும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. வெறும் எட்டு நாட்களில், கூலியின் இந்தி பதிப்பு ரூ.26.02 கோடி வசூலித்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்து ஷங்கர் இயக்கிய எந்திரன் (2010) படத்தின் இந்தி பதிப்பை (ரூ.23.84 கோடி) முந்தி, ரஜினியின் இரண்டாவது பெரிய ஹிட்டாக கூலி மாறியுள்ளது. இந்தி சினிமாவில் ரஜினியின் செல்வாக்கு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
25
கூலி படத்தின் வசூல் நிலவரம்
இந்தியில் முதல் நாளில் ரூ.4.5 கோடியுடன் தொடங்கிய கூலி, இரண்டாம் நாளில் ரூ.6.25 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.4.25 கோடியும், நான்காம் நாளில் ரூ.4.75 கோடியும் வசூலித்து, வார இறுதியில் ரூ.19 கோடிக்கும் மேல் வசூலித்தது. Sacnilk தகவலின்படி, ஐந்தாம் நாளில் ரூ.1.85 கோடி, ஆறாம் நாளில் ரூ.2 கோடி, ஏழாம் நாளில் ரூ.1.3 கோடி, எட்டாம் நாளில் ரூ.1.12 கோடி என வசூல் தொடர்ந்தது.
35
எந்திரன் லைஃப் டைம் வசூல்
2018 இல் வெளியான 2.0 தான் இந்தியில் ரஜினியின் மிகப்பெரிய ஹிட். அற்புதமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் வில்லனாக அக்ஷய் குமாரின் நடிப்பு காரணமாக, இப்படம் இந்தியில் ரூ.189 கோடிக்கும் மேல் வசூலித்தது. கூலி இன்னும் 2.0 வசூலை விட பின்தங்கியிருந்தாலும், வெறும் எட்டு நாட்களில் எந்திரன் படத்தில் லைஃப் டைம் இந்தி வசூலை முந்தியது படத்திற்கும் ரஜினிக்கும் கிடைத்த வரவேற்பை காட்டுகிறது.
ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி நடித்த வார் 2 படத்துடன் போட்டியிட்டு ஹிந்தியில் கூலி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூலி படம் இந்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இதில் பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கானும் நடித்திருக்கிறார். ரூ.235 கோடி வசூலித்த கூலி, ரஜினியின் மூன்றாவது பெரிய ஹிட்டாக மாறியுள்ளது.
55
பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் சூப்பர்ஸ்டார்
2.0 மற்றும் ஜெயிலர் ஆகியவை கூலிக்கு முன்னால் உள்ளன. அடுத்த வாரமும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும், ரூ.275 கோடி வரை எட்டக்கூடும் என்றும் வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ரஜினியைப் பொறுத்தவரை, தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்து ஏன் குறையவில்லை என்பதை தனது கூலி பட வசூல் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். 75 வயதிலும் சாதனைகளை முறியடித்து, தனது ஸ்வேக்கிற்கு இணை எதுவுமில்லை என்பதை தலைவர் நிரூபித்துள்ளார்.