
நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பக் காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிட்டது அசைவ உணவுகளைத்தான். ஆனால் ரஜினியின் குடும்பத்தார் சைவம் தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்களாம். இதனால் பெரும்பாலும் அவரது வீட்டில் சைவ உணவுகள் தான் சமைக்கப்படுமாம். ஆனால் ரஜினி அசைவ பிரியர் என்பதால் அதை சாப்பிடுவதற்காக அவருக்கு தனியாக நண்பர்களும் இருந்திருக்கிறார்கள். அப்படி ரஜினியிடம் நெருங்கிப் பழகியவர்கள் சிலர் அவரின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.
அதில் ஒருவர் தான் முத்தப்பா. இவர் ஏவிஎம் ஸ்டியோவில் வேலை பார்த்தவர். பல வருடம் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக பணியாற்றியவர் இந்த முத்தப்பா. வடபழனியில்தான் இவரது வீடு இருந்ததாம். எப்போதெல்லாம் ரஜினிக்கு அசைவ உணவான மீன் குழம்பை சாப்பிட விரும்புவாரோ அப்போதெல்லாம் முத்தப்பா வீட்டிற்கு சென்றுவிடுவாராம். பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் முத்தப்பா வீட்டிற்கு ரஜினி செல்வாராம். யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக ஒரு சாதாரண காரில் செல்வாராம் ரஜினி.
அதிலும் முத்தப்பா வீட்டிற்கு வரும்போது ஏதாவது மாறுவேடத்தில் தான் ரஜினி வருவாராம். அங்கு மீன் குழம்பை ருசித்து சாப்பிடுவாராம் ரஜினி. அதேபோல் முத்தப்பாவின் மனைவி வைக்கும் தலைக்கறி குழம்பும் ரஜினியின் பேவரைட் உணவுகளில் ஒன்றாம். அதுமட்டுமின்றி ஆட்டுக் குடலும் ரஜினிக்கு பிடிக்குமாம். தனக்கு அசைவ உணவு சாப்பிட தோன்றினால், முன்கூட்டியே முத்தப்பாவிடம் சொல்லிவிடுவாராம் ரஜினி. சூப்பர்ஸ்டாருக்கு வயிறு நிறைய அசைவ சாப்பாடு போட்ட முத்தப்பா கடந்த 2018ம் ஆண்டு காலமானார்.
இதையும் படியுங்கள்... போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா; ரஜினிகாந்த் பங்கேற்பு!
முத்தப்பாவை போல் ரஜினிக்கு உணவு விஷயத்தில் பல திடீர் நண்பர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினிக்கு நீலாங்கரை தாண்டி ஒரு பங்களா இருக்கிறதாம். அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சைக்கு மேற்கொண்டு சென்னை திரும்பியப் பின் நீலாங்கரை அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸில் தான் சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுத்தாராம். அப்படி அவர் அங்கு தங்கி இருக்கும் போது அந்த பங்களாவுக்குப் பின்புறம் ஒரு குடிசை வீடு இருந்துள்ளது, அவர்களிடமும் மிக சகஜமாக பேசுவாராம் ரஜினி. அப்படியான பழக்கத்தில் அந்த வீட்டு நண்பரிடம், தனக்கு கருவாட்டுக் குழம்பு செய்து தரும்படி கேட்டு சாப்பிடுவாராம் ரஜினி.
ரஜினிக்கு நெருக்கமானவர்ளுக்குத் தெரியும் அவக்கு கருவாட்டுக் குழம்பு என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று, ரஜினியே தன் பழைய பேட்டிகளில் இதுபற்றி கூறி இருக்கின்றார். இதுபோன்று ரஜினிக்கு பல அசைவ சாப்பாட்டு நண்பர்கள் இருந்தார்களாம். இவ்வளவு வெறித்தனமான அசைவ பிரியராக இருந்து வந்த ரஜினி, ஒரு கட்டத்தில் தன் உடல் நலனை கருத்தில் கொண்டு அசைவம் சாப்பிடுவதையே சுத்தமாக கைவிட்டுவிட்டாராம். தற்போது அவருக்கு பிடித்தமான உணவுகள் அனைத்தும் காய்கறி வகைகள் தான். அதிலும் சாலட் தான் அதிகம் சாப்பிடுவாராம்.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜும் வேண்டாம், மணிரத்னமும் வேண்டாம்; திடீரென இயக்குனரை மாற்றிய ரஜினி!