தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி படம் உருவாகி உள்ளது. இதற்கு முன்னதாக அஜித் நடித்து இந்த மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
Ajithkumar Transformation
குட் பேட் அக்லி படத்திற்கான பணிகளை முடித்த கையோடு நடிகர் அஜித் தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் கார் ரேஸ் பக்கம் திருப்பி இருக்கிறார். அந்த வகையில் ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தன்னுடைய அணியுடன் களமிறங்கிய அஜித்குமார் அதில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார். துபாயில் வெற்றிவாகை சூடிய கையோடு ஸ்பெயின் நாட்டிற்கு பறந்த அஜித் அங்கு வாலன்சியாவில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார்.
கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக நடிகர் அஜித், கடந்த சில மாதங்களுக்கு முன் தன் உடல் எடையை சட்டென குறைத்து ஸ்லிம்மாக மாறினார். படத்தில் நடிக்கும் வரை கிட்டத்தட்ட 100 கிலோ இருந்த அஜித், குறுகிய காலகட்டத்தில் சட்டென 25 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அவரின் இந்த திடீர் டிரான்ஸ்பர்மேஷன் பார்த்து பலரும் வியந்து போயினர். மேலும் அவரால் எப்படி இவ்வளவு சீக்கிரமாக உடல் எடையை குறைக்க முடிந்தது என பலரும் கேட்டு வந்தனர்.
44
Ajith kumar Weight Loss Secret
இந்த நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி, நடிகர் அஜித் வேகமாக உடல் எடையை குறைத்ததன் சீக்ரெட்டை யூடியூப்பில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதன்படி மூன்று மாதங்களுக்கு அஜித் வெறும் சுடு தண்ணீரை மட்டுமே குடித்து உடல் எடையை குறைத்ததாகவும், அதனுடன் மருத்துவ குழுவின் மேற்பார்வையின் கீழ் புரோட்டீன் பவுடர் மற்றும் தேவையான வைட்டமின்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டதனால் தான் அஜித்தால் மிக வேகமாக உடல் எடையை குறைக்க முடிந்ததாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார். மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் இதுபோன்ற டயட்டை பின்பற்றினால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமாம்.