அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் புதிதாக திறக்கப்படும் துணிக்கடை ஒன்றை திறந்து வைக்க புகழ் வர உள்ளதாக போஸ்டர் மற்றும் ஸ்பீக்கர் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கடை முன் குவிந்து விட்டனர். இன்னும் கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்படாத நிலையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முண்டியடித்து கொண்டு புகழை பார்க்க பலர் முற்பட்டனர். புகழோ... வந்த வேகத்தில் கடையை திறந்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.