பிக் பாஸ் பினிஷ்..அந்த கேப்பில் டாப்புக்கு சென்ற கலெக்டரம்மா..விஜய் டீவியை முந்திய பிரபல சீரியல்..

பிக் பாஸ் முடிவடைந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல்   TRP Top-ல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

BiggbBoss TRP

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.

BIGGBOSSTRP

இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.


BIGGBOSSTRP

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும் 5வது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.

BIGGBOSSTRP

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அந்த 100 நாட்களுக்கு இதர நிகழ்ச்சிகளோ, சீரியல்களோ கிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. இருக்கும்.

KAYAL

ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை டி.ஆர்.பி.யில் ஓரங்கட்டியது கயல் என்கிற சீரியல் தான். டி.ஆர்.பி.யில் பிக்பாஸை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை கயல் சீரியல் பெற்றுள்ளது.

KAYAL

இதனால் அந்த சீரியல் குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோவாக ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்துள்ளார்

sundari

 இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்து வரும் சுந்தரி சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது. 

sundari

நாயகனின் இரண்டு பொண்டாட்டி தில்லு முல்லு வெளிப்படும் வகையில் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், பலநாட்களாக டிஆர்பியில் நம்பர் 1-ல் இருந்த 'கயல்' தொடரை இரண்டாம் இடத்துக்கு தள்ளி, முதலிடத்தை 'சுந்தரி' தொடர் பிடித்துள்ளது.

Latest Videos

click me!