விஜய் டிவி-யில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமானவர் புகழ். இதை தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. குறிப்பாக இவர் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா என ஓடி ஓடி சென்று காதலிப்பதாக கூறி காமெடி செய்ததை எல்லாம் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.
இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசன் முடிவடைந்துள்ள நிலையில், முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னராக இருந்தார். இதை தொடர்ந்து இரண்டாவது சீசனில் கனி டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது சீசனில், பிரபல நடிகையும், பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேதியுமான ஸ்ருதிகா டைல்ட் பட்டத்தை வென்றார்.
அந்த வகையில் தற்போது புகழின் கைவசம் சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ளது. மேலும் புகழ் சமீபத்தில் தான் தன்னுடைய காதலி பென்சியை பற்றி அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், கடந்த மாதம் தன்னுடைய திருமணம் குறித்த தகவலையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது புகழ் பென்சியை தன்னுடைய குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து கொண்ட புகைப்படம் வெளியாக, ரசிகிர் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.