தன் குடும்பத்தோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நடிகை ஜோதிகா!

First Published | Sep 1, 2022, 10:09 AM IST

அவரது சகோதரி மற்றும் சகோதரர் உட்பட ஜோதிகாவின் பிறந்த வீட்டு சொந்தங்கள் குழுமியுள்ளனர்.

jyothika

தமிழ் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் கடந்த 26 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.  பூவெல்லாம் கேட்டுப்பார் உயிரிலே கலந்தது காக்க காக்க பேரழகன் மாயாவி ஜூனியர் சில்லுனு ஒரு காதல் என இவர்களின் ரொமான்டிக் சீன்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது.

jyothika

7 படங்களில் ஜோடியாக நடித்த இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.  தனது குடும்பத்துடனான புகைப்படங்களை ஜோதிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...விஜய் ஏன் சைக்கிளில் வந்தார்..சஞ்சீவ் சொன்ன புதிய ரகசியம்

Tap to resize

jyothika

சமீபத்தில் சூர்யா, ஜோதிகா தன் பிள்ளைகளுடன் விடுமுறையை கழித்த புகைப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஜோதிகாவின் சகோதரியான நக்மாவும் திரையுலக பிரபலம் தான். மேலும் தன கணவருடன் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஜோதிகா. இதன் மூலம் பல பிரபல படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த சூரரைப் போற்று சமீபத்தில் தான் தேசிய திரைப்பட விருதை வென்றிருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...நயன் - விக்கி தயாரிப்பில் 'வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்' படத்தில் நடிக்கும் 5 நடிகைகள் யார் யார் தெர

jyothika

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தோன்றியுள்ள ஜோதிகா, 2015 ஆம் ஆண்டு மீண்டும் திரை உலகிற்கு திரும்பினார். 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு முன்பை விட அதிக வரவேற்பு இருந்தது.

மேலும் செய்திகள்: டைரிக்கு கிடைத்த வரவேற்பு... உருக்கமாக அறிக்கை வெளியிட்ட நடிகர் அருள்நிதி!

jyothika

இதை தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் ஒவ்வொரு படமும் நல்ல வெற்றிகளை கண்டு வருகிறது. இறுதியாக இவர் நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாகி  இருந்தது சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்றது.

jyothika

இந்நிலையில் ஜோதிகா தனது பெற்றோருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தை நிரப்பி வருகிறது. அதில் அவரது சகோதரி மற்றும் சகோதரர் உட்பட ஜோதிகாவின் பிறந்த வீட்டு சொந்தங்கள் குழுமியுள்ளனர்.

Latest Videos

click me!