தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து துவங்கியுள்ள ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரிப்பது மட்டும் இன்றி, சில படங்களை விநியோகமும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அடித்ததாக தங்களது நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் திரைப்படம் வாக்கிங்/டேக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம். இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டே போடப்பட்ட நிலையில், இடையில் நயன் - விக்கி இருவரும் தங்களது திருமண வேலைகள் மற்றும் பட வேலையில் பிஸியானதால் இந்த படத்தின் பணி சற்று தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: டைரிக்கு கிடைத்த வரவேற்பு... உருக்கமாக அறிக்கை வெளியிட்ட நடிகர் அருள்நிதி!
'தானா சேந்த கூட்டம்' படத்தில், விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விநாயக் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் 5 முக்கிய நடிகைகள் குறித்த தகவலை தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த படத்திற்கு சிஎச் சாய் (ரத்னவேலுவின் முன்னாள் உதவியாளர்) ஒளிப்பதிவு செய்கிறார், கமல்நாதன் கலை இயக்குநராக உள்ளார். இத்தனை நாட்கள் ஹனி மூன் என்ஜாய் செய்த இந்த ஜோடி தற்போது மீண்டும் பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியள்ளது குறிப்பிடத்தக்கது.