இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டினம்', என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், பிரதீக் பாப்பருடன் 'ஏக் தீவானா தா' என்கிற படத்தில் நடித்தார்.
பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த போதும், ஹாலிவுட்டில் நடித்து வந்த சூப்பர் கேர்ள் என்கிற தொலைக்காட்சி தொடர் காரணமாக சினிமா வாய்ப்புகளை நிராகரித்து விட்டு தொலைக்காட்சி தொடரில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
எமி ஜாக்சன் தற்போது தன்னுடைய புதிய காதலருடன் டேட்டிங் செய்து வரும் நிலையில், மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும், தமிழ் படத்தில் நடிக்க உள்ளதா புதிய தகவல் வெளியாகியுள்ளது.