சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்குள் நுழைய பலர் கடும் முயற்ச்சி செய்து வந்தாலும், எளிதில் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. அப்படியே ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், முதல் படத்திலேயே ஹீரோவாக நடிப்பது என்பது பலருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சூரி, உள்ளிட்ட பலர் சிறு சிறு வேடங்களில் நடித்து, பின்னரே ஹீரோவாக நடிக்கும் பட வாய்ப்புகளை கைப்பற்றினர்.
அந்த வகையில் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமானவர் தான் அஸ்வின். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் மாடலாக நடித்து வந்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னர் குக் வித் கோமாளி மூலம் பலரும் அறியும் நபராக மாறினார். இதன்பிறகு இவர் நடித்த ஆல்பம் சாங் ஹிட் அடித்தது. இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்க... 40 படங்களின் கதையை கேட்டு தூங்கி விட்டதாக இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இவர், பிரபல தயாரிப்பாளரின் மகளை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த தயாரிப்பாளர் யார்? மற்றும் அந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து அஸ்வினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.