நயன்தாராவை தொடர்ந்து... சைலெண்டாக காய் நகர்த்திய கீர்த்தி சுரேஷ்! போன முறை மாதிரி இந்த முறை ஆகிடாம இருந்தா சரி

First Published | Jul 18, 2023, 7:20 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாகவும், இவருக்கு ஹீரோவாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் இவர் ஹீரோயினாக நடித்த படங்கள், வெற்றிபெற தவறினாலும்... அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்', 'ரெமோ' போன்ற படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்ததால், விஜய், தனுஷ், போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடிபோடும் வாய்ப்பை கைப்பற்றினார்.

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மகாநடி' படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. 

காலில் செருப்பு கூட போடாமல்... மாலத்தீவில் ஹாய்யாக வாக்கிங் செல்லும் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படம்!
 

Latest Videos


இந்த படத்திற்கு பின்னர் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலும்... கதை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்ளும் கீர்த்தி சுரேஷ், கதையின் நாயகியாக நடிக்க வரும் வாய்ப்புகளையே அதிகம் ஏற்று நடிக்கிறார். அந்த வகையில் தற்போது இவரின் கைவசம் தமிழில் மட்டும் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, மற்றும் கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக... 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.
 

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா, மற்றும் மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில்... விரைவில் பாலிவுட் திரையுலகிலும் சைலண்டாக கால் பாதிக்க உள்ளாராம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி, பாலிவுட் திரையுலகில் என்ட்ரி ஆகியுள்ளது ரசிகர்களை அதிர செய்துள்ளது.
 

'கயல்' சீரியல் நடிகர் - நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆத்தாடி இவருக்கு தான் அதிகமாம்!

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக 'மைதான்' படத்தில் நடிக்க இருந்த நிலையில்... ஒரு சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார். கீர்த்தி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரியா மணி நடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது வாய்ப்பு மிஸ் ஆகி இருந்தாலும், இந்த படத்தின் மிஸ் ஆகாது என கூறப்படுகிறது. அதே போல் நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி சைலண்டாக  பாலிவுட் பட வாய்ப்பை கைப்பற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!