'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் கனிக்கு... இத்தனை லட்சம் பரிசாக கிடைத்ததா?

First Published | Apr 15, 2021, 3:53 PM IST

ரசிகர்களின் பேராதரவோடு, விஜய் டிவியில் பரபரப்பாக கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியின் ஃபைனல், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று  மதியம் 2 மணி முதல் 5 மணி நேரம் ஒளிபரப்பானது.
 

இதில் சிறப்பு விருந்தினர்களாக, யாரும் எதிர்பாராத பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான் ஆன்லைன் மூலம், போட்டியாளர்களிடம் பேசியதோடு, தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதே போல் சிம்பு, சந்தோஷ் நாராயணன், ரவுடி பேபி பாடகி தீ , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கினர்.
Tap to resize

நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஃபைனலில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது இடத்தை நடிகை ஷகிலா பெற்றார்.
மூன்றாவது இடத்தை அஸ்வின் பெற்றார்.
அதே நேரத்தில், பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பாபா பாஸ்கர், முதல் மூன்று இடங்களுக்குள் வராதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டத்தை கை பற்றிய கனிக்கு பரிசாக ரூபாய் 5 லட்சம் ரொக்கப்பரிசும் அதுபோக சுமார் 19 ஆயிரம் மதிப்புள்ள கிச்சன் பொருட்களும் வழங்கப்பட்டது. சிறந்த குக் என்கிற கோப்பையையும் நடுவர்கள் வழங்கி சிறப்பித்தனர்.
இதுகுறித்து கனி கூறுகையில்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சவுத் இந்தியன் உணவு வகைதான் செய்ய வேண்டுமென ஏற்கனவே தான் முடிவு செய்திருந்ததாகவும், அந்த வகையில் சிறப்பான சமையல் மற்றும் சிறப்பான பிரசன்டேஷன் ஆகிய இரண்டும் சேர்ந்து தனக்கு இந்த டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்று கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கனி கூறியுள்ளார்

Latest Videos

click me!