Director Nelson : லோகேஷ் கனகராஜை விட அதிகம் சம்பளம் வாங்கும் நெல்சன்... பீஸ்ட் இயக்குனருக்கு இவ்வளவு மவுசா?

Published : Jun 15, 2022, 01:02 PM IST

Director Nelson : தோல்விப் படங்களே கொடுக்காத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நெல்சனை விட குறைவான சம்பளம் வாங்குவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

PREV
15
Director Nelson : லோகேஷ் கனகராஜை விட அதிகம் சம்பளம் வாங்கும் நெல்சன்... பீஸ்ட் இயக்குனருக்கு இவ்வளவு மவுசா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர் என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் தான் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தனர். இருவர் இயக்கிய முதல் படமும் ஹிட்டானதால் கவனம் பெற்ற இவர்கள் அடுத்ததாக நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களுடன் பணியாற்றினர்.

25

அதன்படி நெல்சன் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும், லோகேஷ் கனகராஜ் கார்த்தியின் கைதி படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு வசூலையும் வாரிக்குவித்தது. இதில் குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

35

தொடர்ந்து இரண்டு படங்களை ஹிட் கொடுத்த இவர்களுக்கு அடுத்ததாக ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் நடிகர் விஜய்யின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றனர். இதில் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. மறுபுறம் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது.

45

ஹாட்ரிக் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கிய விக்ரம் படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இவ்வாறு தோல்விப் படங்களே கொடுக்காத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நெல்சனை விட குறைவான சம்பளம் வாங்குவதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

55

விக்ரம் படத்திற்காக இயக்குனர் நெல்சன் வாங்கிய சம்பளம் ரூ.12 கோடி தானாம். அவர் மாஸ்டர் படம் ரிலீசாகும் முன்பே விக்ரம் படத்தில் கமிட் ஆனதால் இந்த தொகையை பெற்றுள்ளாராம். ஆனால் நெல்சனோ அடுத்ததாக இயக்க உள்ள ரஜினியின் தலைவர் 169 படத்துக்காக ரூ.20 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே அவர் தலைவர் 169 படத்தில் கமிட் ஆனதால் இவ்வளவு சம்பளம் கிடைத்துள்ளது. அதுவே பீஸ்ட் ரிலீசுக்கு பின் அவர் ஒப்பந்தமாகி இருந்தால் கதையே வேற.

இதையும் படியுங்கள்... உதயநிதியால் தள்ளிப்போன தனுஷ் படம்... திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories