Thalaivar 169 : ‘தலைவர் 169’ நூறு சதவீதம் நெல்சன் படம் தான் - பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

Published : Jun 15, 2022, 10:31 AM IST

Thalaivar 169 : பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என கூறப்பட்டதால், ‘தலைவர் 169’ படத்திற்கு திரைக்கதை அமைக்க கே.எஸ்.ரவிக்குமார் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்பட்டது.

PREV
14
Thalaivar 169 : ‘தலைவர் 169’ நூறு சதவீதம் நெல்சன் படம் தான் - பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை எடுத்தார். கடந்தாண்டு ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

24

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நெல்சன், அவரை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்விக்கு மோசமான திரைக்கதையே காரணம் என விமர்சனங்களும் எழுந்தன.

34

இயக்குனர் நெல்சன் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். பீஸ்ட் படத்தின் தோல்விக்கு திரைக்கதை தான் காரணம் என கூறப்பட்டதால், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்க நடிகர் ரஜினிகாந்த் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை அணுகியதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.

44

இந்நிலையில், தலைவர் 169 படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைக்க உள்ளதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என நகைச்சுவை நடிகரும், இயக்குனர் நெல்சனின் நண்பனுமான ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் 169 நூறு சதவீதம் நெல்சன் படம் தான் என அவர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்...  Simbu Vs Dhanush : சிம்பு - தனுஷ் இடையே மீண்டும் மோதல்... இப்போ என்ன பிரச்சனை தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories