Sivakarthikeyan : தீபாவளி ரேஸில் இணையும் சிவகார்த்திகேயன் படம்... கார்த்திக்கு போட்டியாக களமிறங்குகிறார்

Published : Jun 15, 2022, 08:06 AM IST

Sivakarthikeyan : கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போது அப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் படமும் ரிலீசாக உள்ளது.

PREV
14
Sivakarthikeyan : தீபாவளி ரேஸில் இணையும் சிவகார்த்திகேயன் படம்... கார்த்திக்கு போட்டியாக களமிறங்குகிறார்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியதோடு ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. இதனால் அவர் நடிக்கும் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

24

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிரின்ஸ். இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடிக்கிறார்.

34

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.

44

இந்நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அன்றை தினம் கார்த்தியின் சர்தார் படமும் ரிலீசாக உள்ளதால், இந்த இரு படங்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...  Sardar Movie : கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தின் வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கிய உதயநிதி

Read more Photos on
click me!

Recommended Stories