விஜய் ஆண்டனியின் வள்ளிமயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Kanmani P   | Asianet News
Published : Jun 14, 2022, 07:03 PM IST

1980-களின் பின்னணியில் உருவாகும் வள்ளிமயில் படத்தின் கதை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

PREV
14
விஜய் ஆண்டனியின் வள்ளிமயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Vallimayil

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ' வள்ளிமயில் ' படப்பிடிப்பை சமீபத்தில் மே மாதம் தொடங்கினார். இப்படத்தில் விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, சத்யராஜ் , பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர் . விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர் .

24
Vallimayil

1980-களின் பின்னணியில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் 'புஷ்பா' புகழ் சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, அறந்தாங்கி நிஷா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

34
Vallimayil

திண்டுக்கல்லில் துவங்கிய படப்பிடிப்பு தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.  தற்போது கொடைக்கானல், தேனி, காரைக்குடி, பழனி ஆகிய இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

44
Vallimayil

வள்ளிமயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ள டி இமான், "விஜய் ஆண்டனி, சத்யராஜ் மற்றும் ஃபரியா அப்துல்லா நடித்துள்ள வள்ளிமயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்வதில் மகிழ்ச்சி! சுசீந்திரன் இயக்கத்தில், தாய் சரவணன், நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் கடவுளைப் போற்றுங்கள் என எழுதியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories