சூரியை வைத்து போலி விளம்பரம்..கல்வி நிறுவனம் மீது புகார் செய்த விடுதலை நாயகன்!

Kanmani P   | Asianet News
Published : Jun 14, 2022, 06:10 PM IST

இன்ஜினியரிங் கல்லூரியில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மதுரையில் உள்ள கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் நிதியை பெற வேண்டும் என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

PREV
14
சூரியை வைத்து போலி விளம்பரம்..கல்வி நிறுவனம் மீது புகார் செய்த விடுதலை நாயகன்!
soori

நகைச்சுவை நடிகர் சூரி ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு விளம்பரம் பரவி வருகிறது. நடிகர் தற்போது ட்விட்டரில் இது ஒரு புரளி என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்த விளம்பரத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

24
soori

அந்த விளம்பரத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மதுரையில் உள்ள கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் நிதியை பெற வேண்டும் என்று அந்த கூறப்பட்டுள்ளது. அந்த விளம்பரம் போலியானது என்று நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

34
soori

இந்நிலையில்  “இந்த விளம்பரத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் விளம்பரத்தில் பார்க்கும் படம் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தைப் பயன்படுத்தி இப்படி ஒரு விளம்பரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த விளம்பரம் போட்டவர்களை அழைத்து, இதுபோன்ற தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். எச்சரிக்கைக்கு செவிசாய்க்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று சூரி கூறியுள்ளார்.

44
soori

மேலும், மதுரையில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறிய அவர், “மாணவர்களுக்கு கல்வியைத் தொடர நாங்கள் செய்யும் உதவிகள் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலவச கல்வி நிதி வழங்குகிறோம், கல்வியை வியாபாரமாக்குகிறோம் என்ற போர்வையில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. என்று எச்சரித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories