அங்க காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது தான்... இங்க இஸ்லாமியர்களுக்கும் நடந்திருக்கு- புயலை கிளப்பிய சாய் பல்லவி

Published : Jun 15, 2022, 11:25 AM IST

Sai Pallavi : மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி படு போல்டாக பேசியிருப்பது தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. 

PREV
14
அங்க காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது தான்... இங்க இஸ்லாமியர்களுக்கும் நடந்திருக்கு- புயலை கிளப்பிய சாய் பல்லவி

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இப்படத்துக்கு பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் தற்போது இவர் கைவசம் கார்கி மற்றும் மாவீரன் ஆகிய படங்கள் உள்ளன.

24

இதில் கார்கி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. அதேபோல் மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

34

இதுதவிர தெலுங்கில் விராட பருவம் என்கிற படத்தை கைவசம் வைத்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் சாய் பல்லவி. ராணா, பிரியாமணி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

அதன்படி புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை சாய் பல்லவி சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது. அவர், இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்படுவதும், இங்கு மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்லச்சொல்லி தாக்குதல் நடத்தி அவரை கொன்றதும் ஒன்றுதான். இரண்டுமே மிகவும் தவறான செயல். வன்முறையை 

மதத்தின் பேரால் எந்தவொரு மனித உயிரும் போகக் கூடாது என்கிற கருத்தை முன்னிறுத்தி நடிகை சாய் பல்லவி படு போல்டாக பேசியிருப்பது தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Thalaivar 169 : ‘தலைவர் 169’ நூறு சதவீதம் நெல்சன் படம் தான் - பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories