ஒரே வாரத்தில் திரையரங்கில் இருந்து வாஷ் அவுட்டான 'கோப்ரா'..! பட்ஜட்டில் பாதி கூட வசூல் செய்யவில்லையா?

First Published | Sep 8, 2022, 1:08 PM IST

'கோப்ரா' திரைப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில், தற்போது அனைத்து திரையரங்குகளிலில் இருந்தும் இப்படம் தூக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியான 'கோப்ரா' திரைப்படம், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், தொடர்ந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. பலர் இந்த படத்தின் கதை புரியவில்லை என்று கூறியதே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படத்தில், விக்ரம் 7 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவமான உடல் மொழியை வெளிப்படுத்தி நடித்திருந்தது மட்டும் இன்றி, டப்பிங்கும் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: அப்பாவை விட வயதில் மூத்த வில்லன் நடிகருக்கு 4-வது மனைவியான அஞ்சு..! ஒரே வருடத்தில் பிறந்தது ஏன்?
 

Tap to resize

சுமார் மூன்று வருடங்கள் எடுக்கப்பட்டு வந்த இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக கே ஜி எப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்திருந்தார். மேலும் மிருணாளினி மற்றும் மீனாட்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

விக்ரம் மற்றும் இந்த படத்தில் நடித்திருந்த நாயகிகள் அனைவரும், கேரளா, பெங்களூரு, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை... போன்ற இடங்களுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்தித்து, ப்ரோமோஷன் பணி மேற்கொண்ட நிலையில், படம் யாரும் எதிர்பாராத விதமாக படு தோல்வியை சந்தித்துள்ளது.

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ஒரே வாரத்தில் அனைத்து திரையரங்குகளில் இருந்தும் தூக்கப்பட்டு விட்டதாகவும், 50 கோடி கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த தகவல், விக்ரம் மற்றும் படக்குழுவினர் செம்ம அப்செட் செய்துள்ளது.  

மேலும் செய்திகள்: கார்கில் போர் நினைவகத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய அஜித்! தீயாக பரவும் புகைப்படங்கள்!
 

Latest Videos

click me!