சுகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம் தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றது. தெலுங்கு மொழியில் உருவான இந்த படம் தமிழ், கன்னட ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.