டான் இயக்குனருக்கு டாடா காட்டிவிட்டு... ‘தலைவர் 171’ பட வாய்ப்பை இளம் இயக்குனருக்கு கொடுத்த ரஜினிகாந்த்?

First Published | Dec 21, 2022, 8:18 AM IST

ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. இவர் கடந்த மே மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். லைகா மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் அள்ளிய படத்தை கொடுத்ததால், சிபி சக்ரவர்த்திக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அப்படி அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ரஜினியின் 171-வது பட வாய்ப்பு. இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

இதையும் படியுங்கள்... வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் டாப் ஹீரோஸ் யார்.. யார்? லீக்கான மாஸ் தகவல்

Tap to resize

இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளெல்லாம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று இப்படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

முழு கதையை கேட்டதும் ரஜினிக்கு அது திருப்தி அளிக்காததால், அவர் சிபி சக்ரவர்த்திக்கு நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மற்றுமொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால், தலைவர் 171 படத்தை இயக்க சிபி சக்ரவர்த்திக்கு பதில் ரஜினி, சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படியுங்கள்... ரூ.400 கோடி பட்ஜெட்.. ரூ.150 கோடி சம்பளம்! தளபதி 68 குறித்து தீயாய் பரவும் தகவல் - இயக்கப்போவது யார் தெரியுமா?

Latest Videos

click me!