தனுஷ், சிவகார்த்திகேயனை விட கம்மி... தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

First Published | Aug 14, 2024, 9:54 AM IST

பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விக்ரம், அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.

Thangalaan

விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேஜிஎப்பில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தங்கலான் படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.

thangalaan vikram

தங்கலான் திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருப்பதால், இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். இப்படத்திற்காக அவர் 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் ஆரத்தி என்கிற சூனியக்காரி கேரக்டரில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனனும் இப்படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளது மட்டுமின்றி சிலம்பம் கற்று நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சிம்ரனுக்கு ரெட் கார்டு! அட்வான்ஸ் வாங்கிட்டு ஷூட்டிங் போகாமல் டிமிக்கி கொடுத்தா சும்மா விடுவாங்களா?

Tap to resize

Thangalaan movie update

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தங்கலான் படமும் ஒன்று. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. உலகமெங்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் தங்கலான் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கான முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Chiyaan Vikram salary for Thangalaan

இந்நிலையில், தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அவருக்கு பின்னர் சினிமாவில் அறிமுகமான தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நிலையில், நடிகர் விக்ரம அவர்களைவிட கம்மி சம்பளம் வாங்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தங்கலான் படம் வெற்றியடைந்தால் விக்ரமும் சம்பளத்தை உயர்த்தி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பாலிவுட்டின் இந்த உச்ச நடிகைகள் எல்லாம் முதலில் சீரியலில் நடிச்சவங்க தான்.. யார் யாருன்னு பாருங்க..

Latest Videos

click me!