சிம்ரனுக்கு ரெட் கார்டு! அட்வான்ஸ் வாங்கிட்டு ஷூட்டிங் போகாமல் டிமிக்கி கொடுத்தா சும்மா விடுவாங்களா?

First Published | Aug 14, 2024, 9:17 AM IST

தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு வேறொரு படத்தில் நடிக்க சென்ற நடிகை சிம்ரனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கே ராஜன் தெரிவித்துள்ளார்.

Simran

தமிழ் திரையுலகில் அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை சிம்ரன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள அவர், திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார். பின்னர் ஜிவி பிரகாஷின் திரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் சீமராஜா, ரஜினிக்கு ஜோடியாக பேட்ட போன்ற படங்களில் நடித்தார்.

Actress Simran

இருப்பினும் சிம்ரனுக்கு அவருடைய இரண்டாவது இன்னிங்ஸில் வெயிட்டனா ரோல் அமையாமலே இருந்த நிலையில், அண்மையில் வெளிவந்த பிரசாந்தின் அந்தகன் திரைப்படம் அவருக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது என்றே சொல்லலாம். தியாகராஜன் இயக்கிய அப்படத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார் சிம்ரன். அவரின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இப்படி தமிழ் திரையுலகில் கொடிகட்டிப்பறந்த சிம்ரனுக்கு தெலுங்கு திரையுலகம் ரெட் கார்டு போட்ட சம்பவம் பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அடடே இவர்தான் அடுத்த பிக்பாஸா... ஒருவழியாக கன்பார்ம் ஆன தொகுப்பாளர் - கமல் இடத்தை பிடித்த அந்த பிரபலம் யார்?

Tap to resize

Red Card for Simran

தெலுங்கில் படம் நடிக்க தயாரிப்பாளர் ஒருவரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு அவருக்கு டேட் கொடுக்காமல் மற்றொரு முன்னணி நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததும் அந்தப் படத்தில் நடிக்க சென்றாராம் சிம்ரன், அதைத் தொடர்ந்து ஆந்திர தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்ரன் மீது புகார் கொடுக்கப்பட்டதாம். அதைத் தொடர்ந்து அவர் மீது ஆக்‌ஷன் எடுத்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாதபடி செய்ததாம்.

Red Card for Prakash raj

அதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சிம்ரன் ரூ.5 லட்சம் பைன் கட்டிய பின்னரே அவரை மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க அனுமதித்தார்களாம். அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பின்னர் அபராதம் செலுத்திய பின்னரே நடிக்க வைத்தார்களாம். இந்த தகவலை தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். இவை சிம்ரன், பிரகாஷ் ராஜ் இருவரும் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... புதிதாக வாங்கிய Lexus LM காரை ஓட்டி சென்ற தளபதி விஜய்! இந்த காரின் சிறப்பு என்ன? வைரலாகும் வீடியோ!

Latest Videos

click me!