நடிகை வைஷ்ணவி அருள்மொழி கதாநாயகியாக நடித்து வரும் வீரா தொடரில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில், நடிகை அபிராமி வெங்கடாச்சலம் நடிக்க உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.
மாடலிங் துறையில் பிரபலமான நடிகை அபிராமி, ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் தல அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
25
Abhirami Venkatachalam Love with Kavin
இந்த படத்தில் நடித்து முடித்த கையேடு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். உள்ளே வந்த முதல் வாரத்திலேயே... 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக கவினை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை காதலிப்பதாக கூறி அதிர வைத்தார்.
பின்னர் அந்த காதல் காற்றோடு கரைந்து போக.... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன், ஏற்கனவே ஒரு ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி வந்த முகேன் ராவை காதலிப்பதாக கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் செம்ம ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. காதலை வைத்து இவர் கன்டென்ட் கொடுத்தாலும்... சில விஷயங்களில் இவர் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு பிடிக்காததால், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினர் ரசிகர்கள்.
45
Abhirami Venkatachalam serial
மேலும் நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும்... எனோ இவரின் திறமையை முழுமையாக வெளிபடுக்கும் படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது அதிரடியாக சின்னத்திரையின் உள்ளே நுழைந்துள்ளார்.
அதன் படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்... மாறுபட்ட எமோஷனல் ட்ராமாவான 'வீரா' தொடரில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க அபிராமி வெங்கடாச்சலம் கமிட் ஆகியுள்ளார். இன்றி சீரியல் முழுவதும் தொடர்வாரா? அல்லது கேமியோ ரோலில் நடிக்கிறாரா... என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.