Published : Aug 13, 2024, 10:04 PM ISTUpdated : Aug 15, 2024, 07:51 AM IST
ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியா முழுவதும் 76-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், நம் இந்திய நாட்டையும், தேசத்தையும் போற்றும் வகையில் திரைப்படங்களில் இடம்பெற்ற தேச பக்தி பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எத்தனையோ விதமான ஜானரில் திரைப்படங்கள் வந்தாலும், தேச பக்தி படங்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதுபோன்ற படங்கள் நம் உணர்வையும், தேசத்திற்காக உயிர் நீத்தவர்களையும் நினைவு படுத்தும் விதத்தில் எடுக்கப்படுகின்றன. எனவே இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் எப்போதுமே தங்கள் முழு ஆதரவை கொடுத்து வருகிறார்கள். சரி அந்த வகையில் ஒவ்வொரு மனிதரின் தேச உணர்வை தட்டி எழுப்பிய, தேசபக்தி பாடல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
29
bharathi
பாரதி:
முடாசு கவிஞன், 'பாரதியாரின்' வாழ்க்கை படமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 'பாரதி'. பாரதியார் வேடத்தில் நடிகர் சாயா ஜி ஷிண்டே நடிக்க, அவரின் மனைவி செல்லம்மாள் கதாபாத்திரத்தில் தேவயானி நடித்திருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் காதில் தேன் வந்து பாயும் இனிமையான பாடல்களாக இருந்தாலும், 'வந்தே மாதரம்' என்கிற பாடல் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தேசப்பற்றை ஊற்றெடுத்து ஓட வைத்தது.
39
Jaihind
ஜெய்ஹிந்த்:
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற தேச பற்று திரைப்படம் தான் ஜெய்ஹிந்த். இந்த படத்தில் இடம்பெற்ற 'தாயின் மணிக்கொடி' என்கிற பாடல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் சுதந்திர தின விழாக்களிலும் ஒலிக்கப்படும் பாடலாக உள்ளது.
நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகை மதுபாலா நடிப்பில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில், ஏ ஆர் ரகுமான் இசையமைத்த தேச பற்று பாடலான 'தமிழா தமிழா' அதிகம் கவனிக்கப்பட தேச பக்தி பாடலாகும்.
59
Indian
இந்தியன்:
இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் படத்திலும் தேசபக்தியை தூண்டும் விதத்தில் இடம்பெற்றிருந்த, 'கப்பலேறி போயாச்சு' என்கிற பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு பாடலாகும். ஆனால் இந்தியன் 2 படத்தில் இது போல் ரசிகர்களை எழுச்சி பெற செய்யும் ஒரு தேச பக்தி பாடல் இல்லாதது. ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் என்றே கூறலாம்.
ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான், இசையில் வெளியான சுயதீன சுதந்திர பாடல் தான் 'தாய்மனே வணக்கம்'. இப்பாடல் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் தேச உணர்ச்சியையும் தூண்டும் விதத்தில் அமைந்தது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் ஒளிபரப்பப்படும் பாடல்களில், கண்டிப்பாக இந்த பாடல் தவிர்க்க முடியாக பாடலாக உள்ளது.
79
indira
இந்திரா:
நடிகர் அரவிந்த்சாமி மற்றும் அனுஹாசன் ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்தை நடிகை சுஹாசினி இயக்கியிருந்தார். இப்படத்தில் சுதந்திர தின விழாவில் பாடுவது போல் எடுக்கப்பட்ட, 'அச்சம் அச்சம் இல்லை' என்கிற பாடல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முணுமுணுக்கக் கூடிய ஒரு தேசப்பற்று பாடலாக மாறியது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'பாரத விலாஸ்' திரைப்படத்தில், இடம்பெற்ற 'இந்திய நாடு என் நாடு' என்கிற பாடல், மதம், மொழி, கலாச்சாரம், போன்றவற்றை கடந்தது தேசப்பற்று என்பதை பறைசாற்றும் விதத்தில் அமைத்திருக்கும்.
99
Kappalotiya Thamizhan
கப்பலோட்டிய தமிழன்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நம் தேச விடுதலைக்காக பாடுபட்ட 'கப்பலோட்டிய தமிழன்' என அழைப்பதும் வா. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்திருந்த திரைப்படம் தான் 'கப்பலோட்டிய தமிழன்'. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மிகவும் பிரபலமானவை என்றாலும், 'என்று தனியும் இந்த சுதந்திர தாகம்' என இடம்பெற்ற பாடல் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம்பிடித்த பாடலாகும்.