Published : Aug 13, 2024, 08:17 PM ISTUpdated : Aug 13, 2024, 08:18 PM IST
சந்திரபாபு தனக்கு கடைசி காலம் வரை உணவு வழங்கியதற்கு... இறந்த பின்னர் தன்னுடைய நன்றி கடனை வித்தியாசமான முறையில் செலுத்தியுள்ளார். அது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிப்புக்காக உயிரையே விட துணிந்து, வாய்ப்பை பெற்றவர் தான் சந்திரபாபு. தன்னுடைய ஈடு இணையற்ற நடிப்பாலும், சிந்திக்க வைக்கும் பாடலாலும் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த சந்திரபாபு, ஒரு கட்டத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றவர்.
27
jp chandrababu Sad Marriage life
இவரின் பெயரும்... புகழும் காலம் கடந்து போற்றப்படும் வகையில் இருந்தாலும் இவரின் கடை காலம் என்பது மிகவும் துரயமானது. அதாவது தன்னுடைய திருமண வாழ்க்கை ஒரே நாளில் முடிவுக்கு வந்த நிலையில், இதன் பின்னர் சந்திரபாபு திருமணமே செய்துகொள்ளவில்லை என்றாலும், இதனால் மனதளவில் அதிக அளவு பாதிக்கப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து... இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே தான் நடிப்பேன் என கூறி பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பின்னர் தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தார். ஆனால் இந்த படம் இவருக்கு மிகப்பெறிய தோல்வி படமாக மாறிய நிலையில், தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்க கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் தன்னுடைய நண்பர் MGR மற்றும் சாவித்திரியை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சந்திரபாபு, எம்ஜிஆரை அதிகம் சீண்டி பார்த்ததால் இப்படம் 2 நாள் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்பட்டு, கைவிடப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருள் இழப்பை சந்தித்தார் சந்திரபாபு.
47
jp chandrababu and savitri friendship
ஒரு கட்டத்தில் மிகவும் நொடிந்து போன இவருக்கு... இவரின் தோழி சாவித்திரி மதுவை ஊற்றி கொடுத்து ஆறுதல் படுத்த, இருவருமே 24 மணிநேரமும் மதுவில் மூழ்கி போய் பணம், பொருள் என அனைத்தையும் இழக்க நேரிட்டது.
கையில் காசு இல்லாமல், தங்க வீடு இல்லாமல்... மீண்டும் ஒரு வானம்பாடி போல் ஆன சந்திரபாபுவுக்கு உணவு அடைக்கலம் கொடுத்தவர் MSV தான். MSV-க்கு சந்திரபாபு ஆரம்ப காலத்தில் கொடுத்த வாய்ப்புகளும், சந்திரபாபு காட்டிய உண்மையான அன்புக்கும், நட்புக்கும் நன்றி கடனாக சந்திரபாபுக்கு தினமும் 3 வேலையும் MSV வீட்டில் இருந்து வகை வகையான உணவுகள் சென்று விடும். சில நேரங்களில் சாப்பாடு எடுத்து செல்ல நேரம் ஆகிவிட்டால், இவரே MSV வீட்டுக்கு நேரில் போய் தன்னுடைய பசியை ஆற்றி கொள்வாராம்.
67
Thenkai Srinivasan help
MSV-யை பொறுத்தவரை உனக்கு காலம் முழுவதும் சாப்பாடு போட, உன்னை பார்த்து கொள்ள நான் இருக்கிறேன் அனால் நீ குடியை மட்டும் தொடவே கூடாது என கூறினார். ஆனால் சந்திரபாபு மொத்தமாக குடியில் மூழ்கியதால் இவரால் அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. MSV-க்கு அடுத்த படியாக சந்திரபாபுக்கு உதவியவர்கள் தேங்காய் சீனிவாசன், மற்றும் ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் தான். சந்திரபாபு யாரிடமும் குடிக்காக கெஞ்ச கூடாது என்பதற்காகவே அவர் கேட்கும் நேரங்களில் எல்லாம் இவர்கள் இருவரும் அவருக்கு தேவையான பணத்தை கொடுப்பது மட்டும் இன்றி மதுவும் வாங்கி கொடுத்துள்ளனர்.
அதிக படியான குடியால்... ஒரு கட்டத்தில் மஞ்சள் காமாலை நோயால் சந்திரபாபு அவதிப்பட நேர்ந்தது. அவரை காப்பாற்றி கொண்டு வர, MSV மற்றும் தேங்காய் சீனிவாசன் போன்ற பிரபலன்க போராடினாலும் சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்காத நிலையில் 1974 மார்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தார். தன்னுடைய உயிர் பிரிவதற்கு முன்னர், எனக்கு மூன்று வேலையும் சோறு போட்ட MSV வீட்டின் வாசலில் என்னுடைய சடலம் இரண்டு நிமிடமாவது இருக்க வேண்டும் இதுவே நான் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் என கூறி நெகிழ வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.