ரஜினி தத்தெடுத்த ஓட்டல் சர்வர்; யார் இவர்? இவருடைய சிறப்புக்கள் என்ன?

Published : Aug 13, 2024, 07:31 PM ISTUpdated : Aug 14, 2024, 10:10 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தந்தையாக யாரை தத்தெடுத்தார், அவரின் பின்னணி என்ன, எப்படி ரஜினியின் வாழ்க்கையோடு இணைந்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்ள படிக்கவும்.

PREV
17
ரஜினி தத்தெடுத்த ஓட்டல் சர்வர்;  யார் இவர்? இவருடைய சிறப்புக்கள் என்ன?
Rajinikanth

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராகவே திகழும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். தனது துள்ளலான ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரஜினிகாந்த். நடிப்பை தாண்டி தனது பணிவு, எளிமை ஆகியவற்றுக்காகவும் அவரின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

27
Rajinikanth

ரஜினிகாந்தின் மனைவி மற்றும் இரு மகள் குறித்து நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் ஒருவரை தனது தந்தையாக ஏற்றுக்கொண்டார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மை தான். ரஜினிகாந்த் 2012 ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிய நூலகர் ஒருவரை தனது தந்தையாக தத்தெடுத்தார்.

37
Palam Kalyana Sundaram

அவர் பெயர் பாலம் கலயாணசுந்தரம். இவர் ஒரு நூலகர் ஆவர், இந்த தன்னலமற்ற நபர் தனது சம்பாத்தியம் முழுவதையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். தனது 30 ஆண்டுகால சேவையில், கல்யாண சுந்தரம் தனது முழு பணத்தையும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.

47
Rajinikanth

அவரின் உன்னதமான பணியால் ஈர்க்கப்பட்ட  ரஜினிகாந்த் 2012ல் கல்யாண சுந்தரத்தை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். மேலும் அவரை தனது வீட்டிற்கே ரஜினிகாந்த் அழைத்து சென்றார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த கல்யாண சுந்தரம் பின்னர் வேறு இடத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.

57
Palam Kalyana Sundaram

ஒரு தசாப்த காலமாக ஹோட்டலில் சர்வராகவும் பணியாற்றிய கல்யாண சுந்தரம், தனது ஓய்வூதியத் தொகையான ரூ.10 லட்சத்தை கூட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். தனது சம்பாத்தியத்தை முழுவதுமாக சமூகப் பணிக்காக செலவழித்த உலகின் முதல் நபர் திரு கல்யாண சுந்தரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் சமூக சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO), 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்தது.

67
vettaiyan

ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள வேட்டையன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஃபஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

 

77
Coolie

மேலும் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயலிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories