"அவர் தஞ்சாவூர் போனதும்.. தலையாட்டாமல் நின்ற பொம்மைகள்" டிவோஷனல் மோடில் நடிகை சாய் பல்லவி - வைரல் பிக்ஸ்!

Ansgar R |  
Published : Aug 13, 2024, 09:50 PM IST

Sai Pallavi : சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

PREV
14
"அவர் தஞ்சாவூர் போனதும்.. தலையாட்டாமல் நின்ற பொம்மைகள்" டிவோஷனல் மோடில் நடிகை சாய் பல்லவி - வைரல் பிக்ஸ்!
Actress Sai Pallavi

கவர்ச்சி என்கின்ற ஒரு விஷயத்தை தங்களுடைய பலமாகக் கொண்டு உயராமல், முழுக்க முழுக்க தங்களுடைய நடிப்பு திறமையால் உயர்ந்து வரும் சில நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கோத்தகிரியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை தான் சாய் பல்லவி. 

டெய்லி வகை வகையா சூப்பர் சாப்பாடு.. த்ரிஷாவை ஸ்பெஷலாக கவனித்த டாப் ஹீரோ - அவரே வெளியிட்ட கிளிக்ஸ்!

24
Actress Sai Pallavi Movies

அதன்பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்கின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த சாய் பல்லவி, கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "பிரேமம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சராக திரையுலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவர் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

34
Sai Pallavi in Thanjavur

இந்த சூழலில் தான் கடந்த 2018ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "மாரி 2" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து கோலிவுட் உலகில் அறிமுகமானார். தொடர்ச்சியாக என்.ஜி.கே, பாவ கதைகள் மற்றும் கார்கி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் தற்பொழுது சிவகார்த்திகேயனோடு இணைந்து அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

44
Actress Sai Pallavi

பொது இடங்களுக்கு செல்லும்போது, நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதும் தனக்கு மிகவும் பிடித்தமான புடவை அணிந்து செல்லும் சாய் பல்லவி, அழகான பட்டாடை உடுத்தி, தஞ்சை பெரியகோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவரை பார்த்ததும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் தலையாட்டாமல் அவரை பார்த்து வருவதாக நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.

சந்திரபாபுவுக்கு கடைசி வரை சோறு போட்ட பிரபலம்! இறந்த பின்னரும் நன்றிக்கடன் செலுத்திய நெகிழ வைக்கும் சம்பவம்!

Read more Photos on
click me!

Recommended Stories