டெய்லி வகை வகையா சூப்பர் சாப்பாடு.. த்ரிஷாவை ஸ்பெஷலாக கவனித்த டாப் ஹீரோ - அவரே வெளியிட்ட கிளிக்ஸ்!
Actress Trisha : கோலிவுட் குயின் த்ரிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு டாப் ஹீரோ குறித்த சுவாரசியமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
trisha new movie
நடிகை நயன்தாராவிற்கு இருக்கும் அதே அளவிலான வரவேற்பும், புகழும் இருக்கும் ஒரு நடிகை என்றால் அதில் திரிஷா தான். சிம்ரன் மற்றும் ஜோதிகா போன்ற நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நேரத்திலேயே தமிழ் திரை உலகில் களமிறங்கி கலக்கிய நடிகை அவர். இன்று கோலிவுட் உலகின் குயின் என்று அவர் அழைக்கப்படும் த்ரிஷா, ஜூனியர் ஆர்டிஸ்டாக தான் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் கலக்கி வருகின்றார்.
actress trisha krishnan
கடந்த 2019ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான "பேட்ட" படத்திற்கு பிறகு சுமார் இரண்டு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்துவந்த நடிகை த்ரிஷா, கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் தனது பழைய வேகத்தில் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பலியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார், தற்பொழுது விடாமுயற்சி, ராம், விஸ்வம்பர, மற்றும் ஐடென்டிட்டி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகின்றார்.
chiranjeevi and trisha
த்ரிஷா நடித்து வரும் விஸ்வம்பர படத்தில் லீட் ரோலில் நடிப்பது மெகா ஸ்டார் சிரஞ்சீவி தான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சிரஞ்சீவியோடு நடிகை திரிஷா இந்த விஸ்வம்பர படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் நான்குக்கும் மேற்பட்ட திரைப்பட பணிகளை மேற்கொண்டு வரும் அவர், தனது விஸ்வம்பர படம் குறித்த ஒரு சுவாரசியமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.
actress trisha
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தான் செட்டுக்கு வரும்போது தினமும் தனக்கு வகை வகையான உணவுகளை கொண்டு வந்து பரிமாறுவதாக கூறியுள்ள அவர், நல்ல உணவுகளை கொடுத்து தனது டயட்டை கெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். நடிகர் சிரஞ்சீவி ஒரு சாப்பாட்டு பிரியர் ஆவார், ஆகவே அவர் நடிகை த்ரிஷாவுக்கும் வகை வகையான உணவுகளை கொடுத்து அசத்தியள்ளார்.
ரஜினி தத்தெடுத்த தந்தை இவர் தான்.. சம்பாதித்த மொத்த பணத்தையும் ஏழைகளுக்கு வழங்கிய உன்னத மனிதர்..