மதுரை தோசை.. மல்லிப்பூ சூப்பரோ சூப்பர்.. அப்படியே மீனாட்சி அம்மனையும் தரிசிச்சுட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

Ansgar R |  
Published : Aug 13, 2024, 10:14 PM ISTUpdated : Aug 13, 2024, 10:24 PM IST

Aishwarya Lekshmi : பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

PREV
14
மதுரை தோசை.. மல்லிப்பூ சூப்பரோ சூப்பர்.. அப்படியே மீனாட்சி அம்மனையும் தரிசிச்சுட்டேன் - நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி
Madurai Meenakshi Amman Temple

உணவு என்று வரும்பொழுது தமிழகத்தில், மதுரைக்கு என்று ஒரு தனி இடம் எப்பொழுதும் உண்டு. மதுரை ஸ்பெஷல் தோசையை பிடிக்காதவர் யாருமே இல்லை. அதே போல மதுரை என்றாலே மல்லிகை பூவும் ரொம்ப பிரபலம். அந்த வகையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் மதுரைக்கு சென்று மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரை ஸ்பெஷல் தோசையை சுவைத்து வந்துள்ளார்.

தேச பக்தியை மனதில் ஊற்றெடுக்க வைக்கும்... தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற தேச பற்று பாடல்கள்!

24
Actress Aishwarya

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு வயது 32. அவர் எம்பிபிஎஸ் முடித்த ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தான் பயின்ற கல்லூரியிலேயே சில ஆண்டுகாலம் அவர் இன்டர்ன்ஷிப் முடித்து பயிற்சி மருத்துவராக இருந்த நிலையில் தான், திரைத்துறையில் களமிறங்கினார்.

34
Actress Aishwarya Lekshmi

கடந்த 2017ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அதிகமாகமான அவர் தமிழில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான நடிகர் விஷாலின் "ஆக்சன்" திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து "ஜகமே தந்திரம்", "புத்தம் புது காலை விடியாதா", "கேப்டன்" போன்ற திரைப்படங்களில் நடித்து கோலிவுட் மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

44
Aishwarya Lekshmi in Madurai

இறுதியாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அவர் இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான "பொன் ஒன்று கண்டேன்" என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். மேலும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் Thug Life திரைப்படத்தில் அவர் இப்போது நடித்து வருகின்றார். இது ஐஸ்வர்யா லட்சுமியின் 25வது திரைப்படமாகும்.

"அவர் தஞ்சாவூர் போனதும்.. தலையாட்டாமல் நின்ற பொம்மைகள்" டிவோஷனல் மோடில் நடிகை சாய் பல்லவி - வைரல் பிக்ஸ்!

click me!

Recommended Stories