இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன் தொலைக்காட்சியில் இருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் தான். ஹம் பாஞ்ச் என்ற சீரியலில் அவர் நடித்திருந்தார். ஆனால் அவர் பாலிவுட்டில் இன்று முன்னணி நடிகையாக மாறுவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பரினீதா என்ற படத்தில் அறிமுகமான வித்யா பாலன் லஹே ரஹோ முன்னா பாய், பூல் பூலையா, நோ ஒன் கில்ட் ஜெசிகா, பா, கஹானி, இஷ்கியா, தி டர்ட்டி பிக்சர், மிஷன் மங்கல், சகுந்தலா தேவி என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.