Chennai Sri Brinda Theatre Closed : சென்னையின் அடையாளமாக இருந்து வரும் தியேட்டர்கள் வரிசையாக மூடுவிழா காண்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் சென்னை அசோக் பில்லர் பகுதியில் இயங்கி வந்த உதயம் தியேட்டர் முழுவதுமாக இடிக்கப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற திரையரங்கமான ஸ்ரீ பிருந்தா தியேட்டர் அதன் ஓட்டத்தை நிறுத்தி உள்ளது.
24
Sri Brinda Theatre
வடசென்னை மக்களுக்காக கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை திரையிட்டு வந்தது. வட சென்னையில் திறக்கப்பட்ட முதல் ஏசி தியேட்டர் இதுவாகும். இந்த தியேட்டரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் திறந்து வைத்தாராம். இந்த தியேட்டரை பிருந்தா திரையரங்கம் என அழைப்பதைவிட ரஜினி தியேட்டர் என்று தான் அழைப்பார்களாம்.
ரஜினி ரசிகரால் கட்டப்பட்ட இந்த தியேட்டரில் எந்த ரஜினி படம் வந்தாலும் தவறாமல் திரையிடுவார்களாம். அதன் காரணமாகவே இதை ரஜினி தியேட்டர் என அழைத்து வந்துள்ளனர். இந்த தியேட்டரில் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அதிகபட்சமாக 200 நாட்கள் ஓடி இருக்கிறது. இதுதவிர ரஜினியின் பாண்டியன், அண்ணாமலை ஆகிய திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிவிழா கண்டுள்ளன.
44
Sri Brinda Theatre Closed
சென்னை பெரம்பூர் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளாக இந்த தியேட்டர் இயங்கி வந்தது. சினிமாஸ்கோப்பில் படங்களை திரையிட்டது முதல் தற்போது டிரெண்டில் உள்ள டிஜிட்டல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் கடந்து வந்த பெருமை இந்த தியேட்டருக்கு உண்டு. உதய கீதம் படத்தின் மூலம் கடந்த 1985-ம் ஆண்டு முதல் இயங்க தொடங்கிய இந்த தியேட்டரில் கடைசியாக டிராகன் படம் திரையிடப்பட்டது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்த தியேட்டரில் கடைசி காட்சி திரையிடப்பட்டது.