Karthigai Deepam: கடத்தலில் நடந்த சொதப்பல்? கல்யாணத்தில் நடக்க போகும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Mar 12, 2025, 02:04 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது ரேவதியின் திருமணத்தை நோக்கி கதை சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய தினம் நடக்க உள்ளது என்ன? என்பதை பார்ப்போம்.  

PREV
14
Karthigai Deepam: கடத்தலில் நடந்த சொதப்பல்? கல்யாணத்தில் நடக்க போகும் ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் அப்டேட்!
karthigai deepam

கார்த்தி எப்படியும் இந்த திருமணத்தை நிறுத்தியே.. ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், மாயாவுக்கு அபார்ஷன் நடந்தபோது, உடன் இருந்த நர்ஸை தேடி சென்ற நிலையில் இன்று என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

24
துர்கா பக்கம் திரும்புமா நவீன் பார்வை

அதாவது, கார்த்திக் நர்ஸை தேடி செல்ல, கார்த்தி ரேவதிக்காக அழைத்து வந்த நவீனின் கவனத்தை துர்கா பக்கம் திருப்ப வேண்டும் என பிளான் போடுகிறார் மயில் வாகனம். இதற்காக கீழே எண்ணெய்யை கொட்டி, துர்காவை வழுக்கி கீழே விழ வைக்க பிளான் பண்ணிய நிலையில், இவர்களின் எண்ணமும் ஈடேறும் விதமாக, நவீன் துர்காவை தாங்கி பிடிக்கிறான். 

Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம்; ரேவதிக்கு கார்த்தி கூட்டி வந்த புதிய மாப்பிள்ளை!

34
பரமேஸ்வரி பாட்டியின் கடத்தல் பிளான்

பின்னர் பரமேஸ்வரி பாட்டி, இந்த மகேஷ் மணமேடைக்கு வந்தால் தானே திருமணம் நடக்கும், அவனை இங்கே இருந்து கடத்தி விட வேண்டும் என பேசி கொண்டிருக்க.. இதை அறிந்துகொள்ளும் மாயா மகேஷை எச்சரிக்கிறாள். பின்னர் இந்த சதியில் நவீனை சிக்கவைக்கும் விதமாக, மகேஷ் தன்னுடைய ரெஸ்ட் ரூபாய் பயன்படுத்திக்கொள்ள கூறும் நிலையில், மகேஷை கடத்த வந்த அருண் மற்றும் ஆனந்த் நவீனை கடத்தி விடுகிறார்கள்.

44
உண்மையை கூற வரும் நர்ஸ்

மற்றொருபுறம் எப்படியோ கார்த்திக் நர்ஸை தேடி கண்டுபிடித்து விஷயத்தை சொல்ல.. நர்ஸ் உண்மையை சொல்ல வருவதாக சொல்லி கிளம்பி வருகிறார். பாட்டி முருகன் கோவிலுக்கு சென்று, கண்ணீர் விட்டு புலம்ப முருகன் குழந்தையாக அவர் கண்முன் தோன்றி, என்ன பாட்டி என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? கண்டிப்பா கார்த்திக் ரேவதி கல்யாணம் நடக்கும் என கூறுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கர்த்திருப்போம்.

Karthigai Deepam: ரேவதியிடம் மல்லிகா டாக்டர் சொன்னது என்ன? அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories