பாண்டியன் ஸ்ரோர்ஸ் 2 சீரியலானது அரசு வேலைக்கு காசு கொடுப்பது உடன் தொடங்கி அரசி மற்றும் குமாரின் காதல் காட்சிகளுடன் முடிவடைகிறது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 423ஆவது எபிசோடில் வேலைக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டுமா, அவ்வளவு பணம் இருந்தா ஒன்றரை பவுன் நகை எடுத்திடலாம், நம்ம கடை நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. நீ அதையே பார்த்துக் கொள்ள என்று செந்திலிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பாண்டியன். பிறகு பழனிவேல் தனது மனைவி சுகன்யாவை பார்க்க வந்த நிலையில், அவரிடம் சண்டை போட்டு அவரை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார் சுகன்யா.
24
Sukanya Scolding Pazhanivel
பழனிவேல் அழுதுகொண்டே செல்வதை கண்டு வடிவு, சுகன்யாவை சத்தம் போட்டுகிறார். ஆனாலும், அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து கதிர் மற்றும் ராஜீ இருவரும் மேரேஜ் ரிஷப்ஷனுக்கு செல்ல அனுமதி கேட்கிறார்கள். பாண்டியனும் ஓகே சொல்லிவிட்டார். இதைத் தொடர்ந்து அரசி மற்றும் குமாரு இருவரும் பார்க்கில் அமர்ந்து பேசிக் கொள்கிறார்கள். அப்போது குமாரு கிஃப்ட் ஒன்றை அரசிக்கு கொடுக்கிறார். அதுவும் தங்க மோதிரம்.
மோமோஸ் கடைக்கு போலாம் என்று குமாரு கேட்க, அரசி வேண்டாம் அந்த கடைக்கு பக்கத்தில் தான் எங்களுடைய மளிகை கடை இருக்கிறது என கூறுகிறாள். உடனே குமாரு அரசிமா அப்படி இப்படி என்று பேசி குமாரு ஐஸ் வைக்கிறார். கடைசியில் அரசி மோதிரத்தை குமாரே அரசி கையில் மாட்டிவிட்டார். உன்னுடைய கையில் போட்டுவிட்ட பிறகு தான் இந்த மோதிரத்திற்கு அழகு வந்திருக்கிறது என கூறுகிறார். இதுவே அரசிக்கு ஆப்பாக மாறும் என்பது தெரிகிறது.
44
Today Pandian Store Serial Episode
அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 423 ஆவது எபிசோடு முடிந்தது. இதை தொடர்ந்து செந்தியிலின் முடிவு என்னவாக இருக்கும், அரசியின் காதல் விஷயத்தை கோமதி கண்டுபிடிப்பாரா? இந்த மோதிரம் விஷயம் எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.