Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம்; ரேவதிக்கு கார்த்தி கூட்டி வந்த புதிய மாப்பிள்ளை!

Published : Mar 10, 2025, 03:53 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதி யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்கிற பரபரப்பான எபிசோட் ஒளிபரப்பாகி வருகிறது.  

PREV
14
Karthigai Deepam: சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம்; ரேவதிக்கு கார்த்தி கூட்டி வந்த புதிய மாப்பிள்ளை!


கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாமுண்டீஸ்வரிக்கு, உண்மை தெரியும் என்பதை அறிந்த மாயா உடனடியாக மகேஷ் அறைக்கு சென்று இது பற்றி கூறி, வா இங்கிருந்து சென்று விடலாம் என சொல்கிறார்.

மாயா - மேகேஷை பார்த்து பேச வரும் சந்திரகலா அவர்கள் இருவரையும் எங்கேயும் போக விடாமல் தடுத்து நிறுத்துகிறார். பின்னர் சாமுண்டீஸ்வரிக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது என, சிவணாண்டியிடம் சொல்ல, அவன் சாமுண்டீஸ்வரியை கடத்தி விடலாம் என புது பிளான் போடுகிறான். 

24
Maya and Mahesh Relationship

ரேவதி தன்னுடைய அம்மா இல்லாமல் எப்படி கல்யாணம் செஞ்சிக்க சம்மதிப்பாள் என கேட்டதற்கு, எல்லாம் சரியாக வரும் என கூறி சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டம் போடுகிறார்கள். மற்றொரு புறம் எப்படியும் அந்த டாக்டர் உண்மையை சொன்னால் இந்த கல்யாணம் நின்று விடும் என நினைத்தோம், ஆனால் அவள் உண்மையை சொல்ல மறுத்துவிட்டாளே என மயில்வாகனத்திடம் - ராஜராஜன் புலம்புகிறார்.

Karthigai Deepam: ரேவதியிடம் மல்லிகா டாக்டர் சொன்னது என்ன? அதிர்ச்சியில் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்

34
Maya Abortion

மாயா அபார்ஷன் செய்யும் போது கூடவே இருந்த நர்ஸை வரவைத்து உண்மையை சொல்ல வைக்கலாம் என திட்டம் போடுகிறார்கள்.  அதே போல ராஜராஜன் தன்னுடைய மகள் ரேவதியை, நீயே கல்யாணம் பண்ணிக்கோ என்று கார்த்திக்கிடம் சொல்ல அவன் அதில் தனக்கு விருப்பம் இல்லை என கூறுகிறான்.

44
Karthick Friend

பின்னர் கவலைப்படாதீங்க இந்த திருமணம் நடக்கும் என கூறி பெங்களூரில் பிஸ்னஸ் மேனாக இருக்கும் தன்னுடைய நண்பன் நவீனை அழைத்து வந்து, ரேவதிக்கு சரியான மாப்பிள்ளை இவர் தான் என கூற, இதை கேட்டு ராஜராஜன் அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? ரேவதி யாரை திருமணம் செய்து கொள்வார்... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthigai Deepam: உண்மையை உடைத்த கார்த்தி - மேடையில் ஷாக் கொடுத்த சாமுண்டீஸ்வரி; 'கார்த்திகை தீபம்' அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories