jai Bhim
கடந்த வருடம் வெளியான படங்களில் இன்று வரை பேசப்படும் படமாக இருப்பது ஜெய் பீம். சூர்யாவின் 2 டி தயாரிப்பில் உருவான இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கி இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படம் இன்றளவும் விருத்தலை பெற்று கொடுக்கிறது. லாக்கப் டெத் என்னும் விசாரணை மரணத்தை மையமாக கொண்ட இந்த படம் இருளர்களின் வாழ்வை எடுத்துரைத்திருந்து.
jai Bhim
ஓய்வுபெற்ற மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துருவின் நிஜ வாழ்க்கையின் அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவானது. இதில் வக்கீல் சந்துருவாக சூர்யா நடித்து வரவேற்பை பெற்றார். வழக்கமான படங்கள் போலல்லாமல் இருந்த போதிலும் பட வெளியீட்டிற்கு பிறகு நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.
மேலும் செய்திகளுக்கு..ஆர்ஆர்ஆர், விக்ரம் பிளாக்பாஸ்டர்களை பின்னுக்கு தள்ளிய கடைசி விவசாயி
jai Bhim
இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. குளஞ்சியப்பன் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், " எங்களின் சொந்த வாழ்வில் கதையை திருடி ஜெய் பீம் படம் உருவாகி உள்ளதாக சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு வருகின்ற ஜூலை 15ஆம் விசாரணைக்கு வர இருக்கின்றது.