கோவிலில் பிச்சை எடுத்த நடிகருக்கு ஓடி போய் உதவிய கேப்டன் விஜயகாந்த்! சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்த தகவல்!

First Published | Sep 5, 2024, 5:45 PM IST

பிரபல நடிகர் ஒருவர் கோயிலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக தெரிய வந்ததும், உடனடியாக அவரை மீட்டு கொண்டு வந்து, அவருக்கு தேவையான உதவிகளை செய்த நடிகர் விஜயகாந்த் பற்றி நடிகை சாந்தி வில்லியம்ஸ் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 

Captain Vijayakanth

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள இராமானுசபுரம், என்கிற ஊரில் அவதரித்த கருப்பு வைரம் தான் நடிகர் விஜயகாந்த். தன்னுனடய 1 வயதிலேயே தாயாரை இழந்த இவர், பின்னர் தன்னுடைய தந்தையின் தொழிலுக்காக மதுரைக்கு குடிபெயர நேர்ந்தது. இதனால் தான் என்னவோ... விருதுநகரின் விருந்தோம்பல் குணமும், மதுரை மண்ணின் வீரமும் குறையாத ஒருவராக இருந்தார் விஜயகாந்த்.  தன்னுடைய தொடக்க கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையில் முடித்த விஜயகாந்த், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் இருந்த புனித மரியன்னை உயர்நிலைப், 10-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்தார்.
 

Vijayakanth Young Life

பள்ளியில் படிக்கும் போதே... சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டதால் படிப்பில் இவருக்கு கவனம் செல்லவில்லை. வெற்றி பெற்ற மனிதர்களை விட அதிகம் தோல்வியடைந்த மனிதர்களையே சந்தித்த சினிமா துறையில்... தன்னுடைய மகனை ஒரு நடிகராக்கி பார்க்க தயங்கினார் விஜயகாந்தின் தந்தை. நடுத்தர வர்க்கம் என்பதும் இதற்க்கு ஒரு காரணம். ஆரம்பத்தில் தன்னுடைய தந்தையின் அரிசி ஆலையில் வேலை செய்த விஜயகாந்த் பின்னர் சென்னை வந்து, சினிமா வாய்ப்பு தேடி அலைந்து... ஹீரோவானது எல்லாம் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. விஜயகாந்தின் வெற்றிக்கு பின்னர் பல போராட்டங்கள் நிறைந்துள்ளது.

தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
 

Tap to resize

Vijayakanth Friendships

விஜயகாந்த் போராடிய நேரத்தில் அவருக்கு உதவியாக இருந்தவர் விஜயகாந்தின் நண்பர் ராவுத்தர் தான். நண்பனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதத்தில், இவர் துவங்கிய சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு ராவுத்தர் என்கிற பெயரையே சூட்டினார். அதே போல் விஜயகாந்தின் வளர்ச்சியில் ராவுத்தரின் பங்கு அளப்பரியது. விஜயகாந்த் சினிமா துறைக்கு வருவதற்கு பட்ட கஷ்டங்களையும், பசியின் கொடுமையையும் உணர்ந்ததால் தான், தன்னை சுற்றி இருப்பவர்கள் எப்போது பசியாக இருக்க கூடாது என நினைத்தார். தன்னுடைய பட யூனிட்டில் நடிகர்கள் முதல் எடுபிடி வேலை செய்யும் அனைவருமே ஒரே மாதிரியானஉணவை சாப்பிட வேண்டும் என நினைப்பவர். சில சமயங்களில் இதற்காக தன்னுடைய சம்பளத்தையும் விஜயகாந்த் குறைத்து கொள்வது உண்டு.

Shanthi Williams

முன்னணி நடிகர், வெற்றிகரமான அரசியல்வாதி என்பதை தாண்டி விஜயகாந்த் எப்போதுமே ஒரு தலை சிறந்த மனிதராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் பார்க்கப்படுபவர். இவரை பற்றி பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல், தற்போது வைரலாகி வருகிறது.

ப்ரீ புக்கிங்கில் ரெகார்ட் பிரேக் செய்த 'கோட்'! தளபதியின் டாப் 5 முன்பதிவு பட வசூல் விவரம்!

Udhaya Prakash

கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த நடிகருக்கு.. விஜயகாந்த் உதவி செய்தது குறித்து இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் தன்னுடைய சிறுவயதில் இருந்தே, தன்னிடம் உதவி என யாராவது கேட்டு கேட்டால், அவர்களுக்கு தன்னால் முடிந்ததை செய்யும் குணம் படைத்தவர். சினிமாவுக்கு வந்த பின்னர், திரை உலகில் யாராவது கஷ்டப்பட்டாலோ அல்லது பிரச்சனையில் இருந்தாலோ முதல் ஆளாக ஓடிப்போய் உதவி செய்வார். அப்படி தான் 1991 ஆம் ஆண்டு வெளியான 'சின்னதம்பி' படத்தில், குஷ்புவின் கடைசி அண்ணனாக நடித்து பிரபலமானவர் உதய பிரகாஷ். இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான படங்களில்  முன்னணி நடிகர்களுடன் குணசித்ர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.
 

Vijayakanth Help Udhaya Prakash

உதய பிரகாஷ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு, கடன் உடன் வாங்கி தயாரித்து, ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை சந்தித்தது. பின்னர் எப்படியும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என முயற்சி செய்தும் கடைசிவரை வாய்ப்பு கிடைக்காமல் குடிக்க ஆளாகி அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நிர்கதியாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவர் மதுரையில் உள்ள ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுத்து க் கொண்டிருப்பதாக நடிகர் ஒருவர் அடையாளம் கண்டுபிடித்து... விஜயகாந்திடம் சொல்ல, பதறிப்போன அவர் உடனடியாக தன்னுடைய ஆட்களை அனுப்பி உதய பிரகாஷை அழைத்து வர சொன்னார்.

GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ
 

Vijayakanth Help Shanthi Williams

முடிகள் காடு போல் வளர்ந்து, அழுக்கு துணியோடு இருந்த இவரை... சரி படுத்தி படுத்தியதாக நடிகை சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அதே போல் விஜயகாந்த் நடித்த 'கஜேந்திரா' படத்தில் நான் நடிக்கும் போது ... எனக்கு கடன் பிரச்சனைகள் இருப்பதை அவரே தெரிந்து கொண்டு, தனக்கு பேசிய சம்பளத்தை விட, அதிகமாக கொடுத்து கடனை அடைக்க உதவியதாகவும் பேசியுள்ளார். இது போன்ற தகவல்கள் விஜகாந்த்தின் சிறந்த மனிதநேயத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!