மாட்டிக்கிட்ட பங்கு... ஒரே பாடல் வரிகளை மாத்தி மாத்தி 6 பாடல்களில் பயன்படுத்திய நா முத்துக்குமார்!!

First Published | Sep 5, 2024, 4:16 PM IST

Na Muthukumar Same Lyrics Songs : பாடலாசிரியர் நா முத்துக்குமார் ஒரே பாடல் வரிகளை 6 வெவ்வேறு பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார் அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Na Muthukumar Same Lyric Songs

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் நா முத்துக்குமார். அவர் மறைந்தாலும் அவர் எழுதிய பாடல் வரிகள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது. இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு வந்து பாடலாசிரியர் ஆகி பல்வேறு வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ள நா முத்துக்குமார் தனக்கு பிடித்தமான பாடல் வரிகளை வெவ்வேறு பட பாடல்களில் பயன்படுத்தியதுண்டு. அப்படி அவர் ஒரே உவமை கொண்ட பாடல் வரிகளை ஆறு வெவ்வேறு பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

kadhal movie

மழை நின்ற பின்னரும் மரம் தூரும் என்கிற உவமை கொண்ட பாடல் வரிகளை தான் நா.முத்துக்குமார் 6 பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த படம் காதல். அப்படத்தில் இடம்பெறும் தொட்டு தொட்டு என்னை பாடலில், ‘மழை நின்ற போதும் மரக்கிளை இங்கே மெதுவாய் தூரும்’ என்கிற வரியை எழுதி இருப்பார் நா.முத்துக்குமார்.

Tap to resize

Naan Mahaan Alla

சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்த படம் நான் மகான் அல்ல. அதில் யுவன் இசையமைத்து படத்தில் இடம்பெறாமல் போன பூமாலை நேரம் என்கிற பாடலில், அதே உவமையுடன் கூடிய, ‘மழை நின்ற பின்னர் தூரல் தரும் மரங்கள் போல’ என்கிற வரியில் பயன்படுத்தி இருப்பார் நா முத்துக்குமார்.

இதையும் படியுங்கள்... தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Raja Rani Movie

அதேபோல் ஸ்ரீகாந்த் - சினேகா ஜோடியாக நடித்து வெளிவந்த நிஜமா நிஜமா பாடலில், ‘மழை நின்ற போதும் மரக்கிளை தூருதே’ என்கிற வரியை எழுதி இருப்பார் நா முத்துக்குமார். இதுதவிர கடந்த 2013-ம் ஆண்டு அட்லீ இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான சில்லென ஒரு மழைத்துளி பாடலில் ‘கோடைக்கால மழை வந்து போன பின்பும், சாலையோர மரம் தன்னாலே நீர் சொட்டும்’ என எழுதி இருப்பார்.

Deiva Thirumagal

பின்னர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த தெய்வத் திருமகள் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ பாடலில், ‘மழை நின்னு போனால் என்ன மரம் தூருதே’ என எழுதி இருப்பார் நா முத்துக்குமார். அதே உவமையுடன் கூடிய வரியை திருடன் போலீஸ் படத்தில் வரும் தெவம் என்பதென்ன பாடலில், ‘மழை துளி நின்றும் மரம் இங்கே அட கண்ணீஇர் வார்க்கும்’ என பயன்படுத்தி இருப்பார். இப்படி ஒரே உவமை கொண்ட பாடல் வரிகளை வெவ்வேறு விதமாக எழுதி 6 பாடல்களில் நா முத்துக்குமார் பயன்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Latest Videos

click me!