Sai Pallavi Sister Marriage : நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், அதன் போட்டோஸ் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி. இவர் மலையாள படம் மூலம் அறிமுகமானாலும் பக்கா தமிழ் பொண்ணுதான். ஊட்டி அருகே உள்ள கோத்தகிரி தான் நடிகை சாய் பல்லவியின் சொந்த ஊராகும். இவர் படித்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான்.
25
Sai Pallavi Sister Pooja Marriage
இவர் கார்கி, மாரி 2, என்.ஜி.கே போன்ற தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் அமரன் என்கிற தமிழ் படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். அமரன் திரைப்படம் வருகிற அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
அமரன் படத்தை தொடர்ந்து தெலுங்கு நாக சைதன்யா ஜோடியாக தண்டல் திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர ராமயணத்தை மையமாக வைத்து பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாய் பல்லவி. அதில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
45
Sai Pallavi Sister pooja
நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்கிற தங்கையும் உள்ளார். இவரும் சினிமாவில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் படம் மூலம் அறிமுகமான பூஜா கண்ணனுக்கு தன் அக்கா அளவுக்கு சோபிக்க முடியாததால் சினிமாவை விட்டு விலகினார். கடந்த சில மாதங்களுக்கு பூஜா கண்ணனுக்கு திருமணம் நிச்சயமானது.
55
Sai Pallavi Sister Pooja Kannan Marriage
இந்நிலையில், இன்று கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி பூஜா கண்ணனின் திருமணம் நடைபெற்று உள்ளது. தங்கையின் திருமணத்தை ஜாம் ஜாம்னு முன்னிருந்து நடத்தி வைத்துள்ளார் சாய் பல்லவி. பூஜா கண்ணன் தன்னுடைய நீண்ட நாள் காதலனான வினீத்தை தான் தற்போது கரம்பிடித்துள்ளார். இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.