The GOAT advance sale collection report out
தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள 'கோட்' திரைப்படம் இன்று காலை வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில், அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள் ரசிகர்கள்.
GOAT Movie Vijay Double action
ஒரு சில தனியார் நிறுவனங்கள், தளபதி விஜயின் திரைப்படம் வெளியாகும் நாளான இன்று... தங்களுடைய ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் 'பிகில்' படத்திற்கு பின்னர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். அதேபோல் மகனாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.
GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ
The GOAT total advance ticket sale report out
AI தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் சிறிய வயது கதாபாத்திரம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், இன்று உலகம் முழுவதும் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி திரையுலகினரை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டுமே, விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சுமார் 65 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இதன் மூலம், இதற்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான மற்ற படங்களை விட... ப்ரீ புக்கிங்கில் 'கோட்' திரைப்படம் அதிக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
The GOAT advance ticket sale report
தளபதி விஜய் ஒரு அரசியல் தலைவராகவும் அவதாரம் எடுத்துள்ளதால் 'தளபதி 69' திரைப்படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். இதுவும் 'கோட்' படத்திற்கே இப்படிப்பட்ட ஒரு வரவேற்பு கிடைக்க காரணமாக அமைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கோட் திரைப்படத்திற்கு முன்னர், தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களின் டாப் 5 ப்ரீ புக்கிங்கில் வசூல் குறித்த தகவலை தெறித்து கொள்ளலாம் வாங்க...
மனைவி சங்கீதா உடன் கோட் படம் பார்த்த விஜய்... FDFS ஷோவில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வேறயா?
Leo
லியோ:
கடந்த 2023 ஆம் ஆண்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்.. தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கோட்'. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றபோதும், 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த நிலையில், சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன் போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களை கவர்ந்தது. தளபதி விஜய்யின் சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான இப்படம், ஃப்ரீ புக்கிங்கில் மட்டும் சுமார் 40 முதல் 45 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
வாரிசு:
Varisu:
வாரிசு:
அதே போல் கடந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, தளபதி விஜய் நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படமான 'வாரிசு'... தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாப்போல் இருந்ததால், தமிழ் தமிழ் ரசிகர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகாமல் போனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சற்று தடுமாற்றத்தை சந்தித்த இந்த படத்தை, இயக்குனர் வம்சி பைட பள்ளி இயக்கி இருந்தார். இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷியாம், சங்கீதா, போன்ற பலர் நடித்திருந்தனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்திருந்தார். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் முதல் நாளே மிகப் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான நிலையில், ஃப்ரீ புக்கிங்கில் சுமார் 50 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.
வந்தாச்சு அறிவிப்பு! பிக்பாஸ் ஆனார் விஜய் சேதுபதி - அவருக்கு இத்தனை கோடி சம்பளமா?
Beast
பீஸ்ட்:
கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும் செல்வராகவன் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படமாக மாறியது. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். தளபதி விஜய் தன்னுடைய 65 ஆவது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இப்பாத்தில் இருந்து விலகியதால், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தளபதியின் இந்த படத்தை இயக்கும் நிலை உருவானது. விஜய்யின் வெறித்தனமான ஆக்சன் திரைப்படமாக வெளியான இப்படம், ப்ரீ புக்கிங்கில் மட்டுமே 35 கோடி முதல் 40 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bigil
மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில், வெளியானதால் இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் வழக்கத்தை விட மிகவும் குறைவானதாகவே இருந்தது. எனவே 'பிகில்' திரைப்படம் இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூலை பீட் செய்தது. அதன்படி 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்', பெண்களின் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் விஜய் கால்பந்து கோச்சாக நடித்திருந்தார். நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க, கதிர், ஜாக்கி ஷரீஃப், விவேக், பசுபதி, டானியல் பாலாஜி, யோகி பாபு, இந்திரஜா ரவிச்சந்திரன், போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஃப்ரீ புக்கிங் மட்டும் சுமார் 35 முதல் 42 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.