என்னது கோட் விஜய்யை போல் நாமும் யங் லுக்கிற்கு மாற முடியுமா! அது எப்படி?

First Published | Sep 5, 2024, 11:55 AM IST

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள டீ ஏஜிங் டெக்னாலஜி பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

GOAT Movie Vijay

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கோட் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி இருக்கிறார். கோட் படத்தில் விஜய் டூயல் ரோலில் நடித்திருப்பதால் அதில், இளம் வயது விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் மற்றும் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் நடித்துள்ளனர். இப்படத்தில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய் இரட்டை வேடம்

நடிகர் விஜய் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோட் படத்தில் டூயல் ரோலில் நடித்துள்ளார். இதற்கு முன்னர் அழகிய தமிழ்மகன், வில்லு, கத்தி, மெர்சல், பிகில் போன்ற படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த விஜய், சுமார் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.

GOAT Movie Vijay Dual Role

டீ ஏஜிங்

கோட் படத்தின் ஹைலைட்டே விஜய்யின் டீ-ஏஜிங் லுக் தான். டீ ஏஜிங் என்கிற அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்தி நடிகர் விஜய்யை யங் லுக்கில் காட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு. ஹாலிவுட் படங்களுக்கு டீ-ஏஜிங் செய்த வி.எப்.எக்ஸ் நிறுவனம் தான் கோட் படத்திற்கு டீ ஏஜிங் செய்துள்ளது. விஜய்யின் டீ ஏஜிங் லுக் படத்தில் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. 

டீ ஏஜிங் என்றால் என்ன?

டீ ஏஜிங் என்பது ஒரு விஷுவல் எஃபெக்ட்ஸ் டெக்னிக். இதன்மூலம் ஒரு வயதான தோற்றத்தில் இருக்கும் நபரை மிகவும் இளமையாக காட்ட முடியும். ஏன் அவர்கள் சிறுவயது கதாபாத்திரத்தை கூட இந்த டீ ஏஜிங் மூலம் திரையில் கொண்டு வர முடியும். இதன்காரணமாகவே இது சினிமாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tap to resize

Vijay De Ageing Look

டீ ஏஜிங் எப்படி இளமையாக காட்டும்?

டீ ஏஜிங் செய்ய இருக்கும் நபரின் முகத்தில் மீசையோ, தாடியோ இல்லாமல் முழுவதுமாக ஸ்கேன் செய்து. அவர்களின் முகத்தின் ஒவ்வொரு பாகங்களின் அசைவுகளையும் படம்பிடித்து, அதன் உதவியுடன் தான் இந்த டீ ஏஜிங் செய்யப்படுகிறது.

விஜய்யை போல் நாமும் யங் லுக்கிற்கு மாற முடியுமா?

கோட் படத்தில் விஜய்யை இளமையாக மாற்றி காட்டி இருந்தார் வெங்கட் பிரபு. அது நிஜத்தில் சாத்தியமில்லாவிட்டாலும், இந்த டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி நாமும் வீடியோவில் நம்மை இளமையாக காட்டிக் கொள்ளலாம்.

De Ageing Look of Thalapathy Vijay

டீ ஏஜிங் பயன்படுத்திய தமிழ் படங்கள்

எந்த ஒரு டெக்னாலஜி வந்தாலும் தமிழ் சினிமாவில் அதை முதலில் பயன்படுத்துவது கமல்ஹாசன் தான். அந்த வகையில் டீ ஏஜிங்கையும் அவர் தான் தன்னுடைய விக்ரம் படத்திற்காக முதன்முதலில் பயன்படுத்தினார். ஆனால் டீ ஏஜிங் செய்யப்பட்ட கமலின் இளம் வயது காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதன்பின்னர் கோட் படத்தில் தான் முழுமையாக டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளனர்.

Goat movie De Ageing Technology

டெக்னாலஜியில் புகுந்து விளையாடிய கோட்

விஜய்யின் கோட் படத்தில் டீ ஏஜிங் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. AI உதவியுடன் தான் இப்படத்தில் கேப்டன் விஜயகாந்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்துள்ளனர். அதேபோல் AI உதவியுடன் பவதாரிணியின் குரலை ஒரு பாடலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... மனைவி சங்கீதா உடன் கோட் படம் பார்த்த விஜய்... FDFS ஷோவில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வேறயா?

Latest Videos

click me!