மனைவி சங்கீதா உடன் கோட் படம் பார்த்த விஜய்... FDFS ஷோவில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வேறயா?

நடிகர் விஜய் தன் மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினர் உடன் சென்னையில் உள்ள திரையரங்கில் கோட் படம் பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

GOAT Movie

விஜய்யின் 68-வது படமான கோட் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து உள்ளார். கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1100 தியேட்டர்களில் கோட் படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

vijay, sangeetha

கோட் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் அப்படம் வேறலெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். அதேபோல் படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளதாகவும், விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் காட்டியிருப்பதை பார்க்கும் போது புல்லரிப்பதாகவும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கோட் படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமில்லை திரைப்பிரபலங்களும் கண்டு ரசித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கொண்டாட்டம் இல்லாத கோட்... சென்னையில் வெறிச்சோடிய தியேட்டர்கள்


Vijay Trisha

அதில் நடிகர் விஜய் நேற்று இரவே கோட் படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்தாராம். சென்னை அடையாறில் உள்ள திரையரங்கில் நேற்று இரவு தன்னுடைய மனைவி சங்கீதா, மகன், மகள் மற்றும் தன்னுடைய பெற்றோர் ஆகியோருடன் வந்து கோட் படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் விஜய் கண்டுகளித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் சிலரும் அப்போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

Keerthy Suresh

அதேபோல் இன்று காலை கோட் படத்தின் முதல் காட்சியை நடிகை திரிஷா கண்டுகளித்தார். அவர் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் வந்து கோட் படத்தை பார்த்து ரசித்தார். கோட் படத்தில் இடம்பெறும் மட்ட பாடலில் நடிகர் விஜய்யுடன் திரிஷா டான்ஸ் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷும் கோட் படத்தின் முதல் காட்சியை சென்னையில் உள்ள திரையரங்கில் கண்டுகளித்தார். 

இதையும் படியுங்கள்... GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ

Latest Videos

click me!