நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் குறித்து அண்மையில் வெளியான ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாளத் திரையுலகில் பூகம்பத்தைக் கிளப்பி உள்ள நிலையில், இது தொடர்பாக நடிகை விசித்ரா பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். திரைத்துரையில் நடைபெறும் பாலியல் அத்துமீறல் குறித்து எந்தவொரு முன்னணி நடிகரும் கருத்து தெரிவிக்கவில்லை. அப்படி பார்த்தால் ஊடகங்கள் தவறான நபர்களிடம் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் நடிகர்களிடம் கேள்வி கேட்பதற்கு பதிலாக நடிகர்களின் மனைவிகளிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.