
விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனே வேற லெவல் ஹிட் ஆனது. அதில் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டாலும் மக்களின் மனதை வென்ற போட்டியாளராக ஓவியா திகழ்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் இறங்கினார். அவரின் தொகுத்து வழங்கும் ஸ்டைலும் நடுநிலைத் தன்மையும் அவரை மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக மாற்றியது. இதை எடுத்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் ரித்திகா வெற்றி பெற்றார். பிக் பாஸ் டைட்டில் வென்ற முதல் பெண் போட்டியாளரும் இவர்தான்.
இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முகென் ராவ் டைட்டில் வின்னர் ஆனார். இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் இந்த சீசனில் தான் கவின், லாஸ்லியா, வனிதா, சாண்டி, தர்ஷன், ஷெரின் போன்ற எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ஆரி வெற்றி பெற்றார். இந்த சீசனில் ஷிவானி - பாலாஜி முருகதாஸின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது.
பின்னர் 2021ல் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இந்த சீசனில் தான் பாவம் நீர் இடையே காதல் மலர்ந்தது. விரைவில் அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொள்ள உள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனில் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்த விக்கிரமனுக்கு பதில் அசிமுக்கு டைட்டில் வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
இதையும் படியுங்கள்...பட்ஜெட் 45 கோடி; ஆனா வசூல் 1 லட்சம் தான்! தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட இந்த படம் பற்றி தெரியுமா?
இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்து முடிந்தது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனார். இந்த சீசன் தான் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கடைசி சீசன் ஆகும்.
ஏழாவது சீசன் முடிந்த கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும், கடந்த சீசனில் அவர் எடுத்த முடிவுகள் கடும் விமர்சனத்துக்குள்ளானதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதிலும் பிரதீப் ஆண்டனியை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. கமலின் விலகலால் அடுத்த பிக் பாஸ் யார் என்கிற கேள்வி என தொடங்கியது. அதன்படி சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, நயன்தாரா ஆகியோரது பெயர்களும் அடுத்த தொகுப்பாளர் பட்டியலில் இருந்தது. அதில் இறுதியாக ஓகே ஆனது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளராக களம் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி இதை சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.
விஜய் சேதுபதியை வைத்து அண்மையில் பாண்டிச்சேரியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சூட்டை நடத்தி முடித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கடந்த சீசனில் ரூ 120 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். கமலோடு ஒப்பிடுகையில் விஜய் சேதுபதிக்கு கம்மி சம்பளமே வழங்கப்பட்டுள்ளதாம். இணையத்தில் உலா வரும் தகவலின் படி விஜய் சேதுபதிக்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு ரூ. 35 கோடி தான் சம்பளமாக வாங்கி வருகிறார். ஆனால் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 50 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்த சீசனில் ஷாலின் சோயா, சீரியல் நடிகர் அருண், தயாரிப்பாளர் ரவீந்தர், தொகுப்பாளர் தீபக் உள்பட பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்து ஹிட்டானதைவிட பிளாப் ஆன படங்கள் தான் அதிகமா! அப்போ கோட் நிலைமை?