சமந்தாவை புறக்கணித்த கேன்ஸ் திரைப்பட விழா..நயன்தார, பூஜா ஹெக்டே, தமன்னாவுக்கு சர்வதேச அங்கிகாரம்..

First Published May 14, 2022, 4:59 PM IST

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நயன்தாரா, பூஜா ஹெக்டே மற்றும் தமன்னா பாட்டியா கலந்து கொள்கின்றனர். மூன்று நடிகைகளும் சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cannes Film Festival

சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா (Cannes Film Festival) :

கேன்ஸ் திரைப்பட விழா 2022 மே 17 முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை 75வது ஆண்டாக பிரான்சில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரபலங்கள் மீண்டும் கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் தங்கள் திறமையைக் காண்பிப்பார்கள். இந்த விழாவில் பாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

Cannes Film Festival

நம்ம ஊர் நாயகிகள் :

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் நயன்தாரா(NAYANTHARA), பூஜா ஹெக்டே(POOJA HEGDE) மற்றும் தமன்னா பாட்டியா(Tamannaah Bhatia) கலந்து கொள்கின்றனர். மூன்று நடிகைகளும் சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள். எட்டு ஜூரி உறுப்பினர்களில் தீபிகா படுகோனேவும் ஒருவர் , அக்ஷய் குமார் மே 18 அன்று திரைப்பட விழாவிற்கு செல்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...விஜய்கான ஸ்கிரிப்ட்டில் விக்ரம்.. சீயான் 61 படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

Cannes Film Festival

கேன்ஸில் இந்தியத் திரைப்படங்கள்:

இவ்விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், மிஷிங் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படத்தை பொறுத்தவரை, ஆர் மாதவனின் ராக்கெட்ரி - நம்பி எஃபெக்ட் , கோதாவரி, ஆல்பா பீட்டா காமா, பூம்பா ரைடு, துயின் மற்றும் ட்ரீ ஃபுல் ஆஃப் கிளிகள் ஆகியவை பிரான்சின் ஒலிம்பியா தியேட்டரில் திரையிடப்படும்.

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சியுடன் கலக்கும் கீர்த்தி சுரேஷ்..அடுத்தடுத்த ஹிட்டுகளால் கிளாமர் அட்ராசிட்டி

SAMANTHA

சமந்தா ( SAMANTHA ) புறக்கணிப்பு :

இந்நிலையில் பான் இந்தியா நாயகியான சமந்தா ஏன் புறக்கணிக்கட்டார் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமந்தா உலகளவில் பிரபலமான நான் ஈ, சமீபத்திய புஷ்பா பாடல் என கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நாயகியாக பார்க்கப்படுகிறார். அதோடு நீண்ட கால முன்னணி நடிகையாகவும் இருப்பவர். அவ்வாறு இருக்கையில் சமீபத்திய பிரபலமான பூஜா ஹெக்டேவை அழைத்தவர்கள் எதற்காக சமந்தாவை புறக்கணித்தனர் என குழப்பம் நிலவி வருகிறது.

click me!