டிக்டாக் மூலம் பிரபலம் ஆனவர் ஜிபி முத்து. இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அங்கு இரண்டு வாரங்களுக்கு தாக்குப்பித்த அவர், தன் மகனை பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக் கூறி, பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு மவுசு கூடிவிட்டது.
குறிப்பாக ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள ஏகே 62 படத்தில் அஜித்துடன் ஜிபி முத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுதவிர சன்னி லியோன் உடன் அவர் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுகுறித்து ஜிபி முத்துவிடம் கேட்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்த அவர், “கனெக்ட் படத்தின் ஈவண்ட் நடத்தியவர்கள் என்னிடம் சொன்ன விதம் வேற, ஆனா அங்கு நடத்துன விதம் வேற. நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க. ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க. எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு.
அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன். இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது. அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க. தூரபோனு சொல்லிட்டாங்க. இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன். பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார். பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன்” என மனவருத்தத்துடன் பேசினார் ஜிபி முத்து.
இதையும் படியுங்கள்... குடும்ப குத்து விளக்கு போல்.. பச்சை நிற சல்வாரில்.. தலை நிறைய மல்லிப்பூ வைத்து மனதை மயக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி!