நடிகை நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை விட, கதையின் நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்து முடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
குறிப்பாக நேற்று இந்த படத்தின் பிரீமியர் ஷோ பிரபலங்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், இதனை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருகை தந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் படு வைரல் ஆனது. படத்தைப் பார்த்த பிரபலங்கள், படம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளதாக தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக வினய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் நயன்தாரா ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.