2 வருட காத்திருப்புக்கு பின் வெளியான வலிமை
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை, இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதுதவிர ஏராளமான தடைகளை சந்தித்த இப்படம் ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்கள்
கடந்த மாதம் 24-ந் தேதி தமிழ், தெலுங்கி, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட இப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும், வசூலை தொடர்ந்து வாரிக்குவித்து வந்தது. வெளியான 3 நாட்களிலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது இப்படம்.
பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் என்ன?
இது ஒருபுறம் இருந்தாலும், வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் போலியானவை என ஒரு சில விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்தன. அதுமட்டுமின்றி நகரங்களை தவிர்த்து பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் 20 சதவீதம் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்ததாகவும் கூறப்பட்டு வந்தன. இதனால் எது உண்மை என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.
உண்மையான வசூல் இதுதான்
இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வலிமை படத்தின் உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்டு உள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். அதன்படி வலிமை படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக அவர் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இப்படம் நாளை ஓடிடி-யில் ரிலீஸாக உள்ளது.
இதையும் படியுங்கள்... Aishwarya Rajinikanth : ஐஸ்வர்யாவின் புதுக் காதல் சக்சஸ் ஆனது... ரஜினி மகள் ஹாப்பியோ ஹாப்பி..!