பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தற்போது தமிழில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை தான் ஜான்வி கபூர் தற்போது காதலித்து வருகிறாராம். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.